தமிழ்நாடு பட்ஜெட் 2019 நாளை தாக்கல்: எதிர்பார்ப்புகள் என்ன?

பொதுத் தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதே போன்று தமிழ் நாடு பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் இருக்குமா?

தமிழ்நாடு பட்ஜெட் 2019 நாளை தாக்கல்: எதிர்பார்ப்புகள் என்ன?
இபிஎஸ் - ஓபிஎஸ்
  • News18
  • Last Updated: February 7, 2019, 9:30 PM IST
  • Share this:
தமிழ்நாடு பட்ஜெட் 2019-2020 நாளை (08/02/2019) தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுத்தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாயின. அதே போன்று தமிழ்நாடு பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 9-வது முறையாக தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

மத்திய அரசு நிதிநிலை பட்ஜெட் 2019-ல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளது. இதே போன்று தமிழ்நாடு அரசும் கூடுதலாக விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மருத்துவக் காப்பீடுத் திட்டத்தைப் போன்ற ஒரு திட்டத்தைக் கூடுதல் நன்மையுடன் மத்திய அரசு செயல்படுத்தி வருவதால், இதில் தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான முடிவை எடுக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த முறை மழை குறைவு என்பதால் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மின் தட்டுப்பாட்டில் இருந்த தமிழ்நாடு தற்போது அதிலிருந்து தற்போது தன்னிறைவு அடைந்துள்ளது. இருதாலும் மின் உற்பத்தியை பெருக்காவதற்கான திட்டங்கள் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளது.பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரி குறைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வந்த பிறகு ஒரு நாடு ஒரே வரி என்ற நிலை உருவாகியுள்ளதால் மறைமுக வரி குறித்த எந்த அறிவிப்புகளும் தமிழ்நாடு பட்ஜெட் 2019-ல் இருக்க வாய்ப்பில்லை.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது, மிதி வண்டி வழங்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச ஸ்கூட்டர் திட்டம், கோழி வளர்ப்புத் திட்டம் போன்றவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

திருமண உதவி திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் போன்றவற்றுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.

பிரசவ காலத்தில் பயன்பெறும் வகையில் மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் தொகை 20,000 ஆக உயர்த்த வாய்ப்பு.

சாலைப் போக்குவரத்துத் துறை குறித்து அறிவிப்புகள், புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு, வெள்ள தடுப்புத் திட்டங்கள், புயல் பாதித்த பகுதிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.

மேலும் பார்க்க: தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் லஞ்சம்... பகிரங்க புகார்
First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading