இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தாலிபான்கள்- ஏற்றுமதி அமைப்பு கவலை

மிரட்டும் தாலிபான்கள்

இந்தியாவுடனான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை ஆப்கானிஸ்தானைப் பிடித்திருக்கும் தாலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவுடனான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை ஆப்கானிஸ்தானைப் பிடித்திருக்கும் தாலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

  85% உலர் பழங்கள் ஆப்கானிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுத்தத்தால் இந்தியாவில் உலர் பழங்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

  Also Read: ஆப்கனில் இருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனி எங்கு இருக்கிறார் தெரியுமா?


   Also Read: காபூலில் ஜாலியாக சுற்றி திரியும் தாலிபான்கள் - வைரலாகும் வீடியோக்கள்!


  இது தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் சஹாய் கூறும்போது, “ஆப்கான் நிலைமைகளை நெருக்கமாக அவதானித்து வருகிறோம். இறக்குமதி பொருட்கள் அங்கிருந்து மாற்று வழியாக பாகிஸ்தான் வழியில் வருகிறது. இப்போதைக்கு சரக்குப் போக்குவரத்தை பாகிஸ்தான் வழியாக தாலிபான்கள் நிறுத்தியுள்ளனர். எனவே இறக்குமதி சுத்தமாக நின்று விட்டது.

  ஆப்கானுடனான இந்திய வர்த்தக உறவு அபரிமிதமானது ஏற்றுமதி 2021-ல் 835 மில்லியன் டாலர்களாகும். அங்கிருந்து 510 மில்லியன் டாலர்களுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதோடு ஆப்கானில் கணிசமான முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளோம். ஆப்கானில் 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

  இதோடு 400க்கும் அதிகமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன” என்றார்.

  ஆனால் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகளை அவர்கள் வளர்த்தெடுத்துத்தான் ஆகவேண்டும் ஆகவே இந்த இழுபறி நிலை தற்காலிகமானதே என்கிறார் டாக்டர் சஹாய்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருப்பினும் இதன் தற்காலிக பலன்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று கவலை வெளியிட்டுள்ளது இந்திய ஏற்றுமதி கழகம்.
  Published by:Muthukumar
  First published: