நீங்கள் வாங்கும் மாத சம்பளம் குறையப் போகிறது.. காரணம் தெரியுமா?

நீங்கள் வாங்கும் மாத சம்பளம் குறையப் போகிறது.. காரணம் தெரியுமா?

மாதிரி படம்

புதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது

  • Share this:
    புதிய ஊதிய கொள்கைளின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனியார் துறையில் வேலைபார்க்கும் ஊழியர்களின் மாதம் சம்பளம் குறைய உள்ளது.

    மத்திய அரசு கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் புதிய ஊதியக் குறியீட்டை நிறைவேற்றியிருந்தது. அதன்படி, வருகிற 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையும்.

    புதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 2021 ஏப்ரல் முதல் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும். இந்த புதிய ஊதிய விதி அமலுக்கு வந்த பிறகு ஊதிய கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும்.

    புதிய விதியின் கீழ் கிராச்சுட்டியின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அடிப்படை சம்பளத்தின்படித்தான் கிராச்சுட்டி கணக்கிடப்படுகிறது. மேலும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும். கிராச்சுட்டி தவிர நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பும் அதிகரிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளம் குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்குப் பெரிய தொகை கிடைக்கும்.
    Published by:Vijay R
    First published: