Home /News /business /

இனி Swiggy ஊழியர்கள் வேறு நிறுவனத்திலும் வேலை செய்யலாம் - மூன்லைட்டிங் பாலிசி அறிமுகம்.!

இனி Swiggy ஊழியர்கள் வேறு நிறுவனத்திலும் வேலை செய்யலாம் - மூன்லைட்டிங் பாலிசி அறிமுகம்.!

Swiggy

Swiggy

Swiggy | பெரும்பாலும் சட்டபூர்வமாக ஒரே நேரத்தில் 2 இடங்களில் தங்கள் ஊழியர்கள் வேலை பார்ப்பதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் ஃபுட் டெலிவரி நிறுவனமான Swiggy-ல் வேலை பார்ப்பவர்களுக்கு இனி இது சாத்தியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஃபுட் டெலிவரி பிளாட்ஃபார்மான ஸ்விக்கி தனது ஊழியர்களுக்காக தொழில்துறையில் முதல் முதலாக ‘மூன்லைட்டிங் பாலிசியை’ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பாலிசியின் கீழ் Swiggy ஊழியர்கள் இன்டர்னல் அப்ரூவல்ஸ் அடிப்படையில் வெளிப்புற ப்ராஜக்ட்களை எடுக்கலாம்.

மூன்லைட்டிங் பாலிசி என்றால் என்ன.?

மூன்லைட்டிங் பாலிசி என்பது முதன்மை வேலையின் சாதாரண வணிக நேரத்தை தவிர்த்து வெளியே மற்றொரு வேலையை எடுப்பதை சில நிபந்தனைகளின் கீழ் அனுமதிப்பது ஆகும். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் போது வேறு நிறுவனத்திற்கு வேலை செய்வதை தடை செய்யும் கொள்கைகளை கொண்டுள்ளன. வெளி நிறுவனங்களிடமிருந்து வேலை அல்லது ப்ராஜெக்டுகளை எடுக்கும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றன. இருப்பினும் சில நிறுவனங்கள் ஊழியர்களை வேறு நிறுவனத்திற்கு வேலை செய்ய அனுமதிக்கின்றன, குறிப்பாக அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் போது.

தனிப்பட்ட வளர்ச்சி..

எனவே Swiggy அறிமுகப்படுத்தி உள்ள மூன்லைட்டிங் பாலிசியின்படி, Swiggy-ல் வேலை செய்தாலும் அதன் உற்பத்தித்திறனை பாதிக்காமல் அலுவலக நேரங்கள் தவிர்த்தோ அல்லது வார இறுதியிலோ வெளி நிறுவனங்களில் ஊழியர்கள் வேலை செய்யலாம். சுருக்கமாக சொன்னால் Swiggy-ல் வேலை செய்தாலும் மற்ற நிறுவனங்களுக்கும் வேலை செய்ய இந்த பாலிசி அதன் ஊழியர்களை அனுமதிக்கிறது.தொற்று காரணமாக போடப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன்களின் போது உழைக்கும் வர்கத்தை சேர்ந்த கணிசமானோர் கூடுதல் வருமான ஆதாரத்தை வழங்கும் ஆதாரங்களை தேடினர். NGO-வில் இருந்தாலும், டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் அல்லது சோஷியல் மீடியாக்களுக்கான கன்டன்டை உருவாக்கினாலும், ஒருவரின் முழுநேர வேலைவாய்பை தவிர்த்து வெளியே வேறு நிறுவனங்களில் பணியாற்றுவது ஒரு தனிநபரின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் என்று உறுதியாக நம்புவதாக Swiggy கூறி இருக்கிறது.

Also Read : அவசரகால மருத்துவ செலவா? PF தொகையில் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்

தங்களது மூன்லைட்டிங் பாலிசி குறித்து கருத்து தெரிவித்த ஸ்விக்கி-யின் மனித வளத்துறை தலைவர் கிரிஷ் மேனன், Swiggy எப்போதுமே தனது ஊழியர்களின் பல்வேறு ஆசைகளை புரிந்து கொள்ளவும், அவர்களின் தேவைகளுக்கு நிறுவனத்தின் கொள்கைகளை வடிவமைக்கவும் முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த புதிய பாலிசியின் மூலம், எங்களுடன் முழுநேரம் வேலை செய்தாலும் எந்த தடையும் இல்லாமல் அவர்களின் ஆர்வத்தை நோக்கி செல்ல ஊக்குவிப்பதே எங்கள் இலக்கு என்றார். இதனிடையே மூன்லைட்டிங் பாலிசியின் கீழ் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிகாட்டுதல்களையும் Swiggy தெரிவிக்கிறது. அதன்படி நிறுவனத்தின் வேலை நேரத்தில் தலையிடும் அல்லது முரண்பாட்டு அபாயத்தை ஏற்படுத்தும் இரண்டாவது வேலை என்பது இன்டர்னல் அப்ரூவலுக்கு உட்பட்டது.

Also Read : வருமான வரி ரீஃபண்ட் வேண்டுமா.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 வருமான வரி விதிகள்.!

இந்த பாலிசி துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள், இணை மற்றும் குழு நிறுவனங்கள் உட்பட Bundl Technologies-ன் அனைத்து முழு நேர ஊழியர்களுக்கும் கிடைக்கும். வழக்கமாக பார்க்கும் வேலைக்கு வெளியே சுவாரஸ்யமான வேலைகளை தேர்ந்தெடுக்கும் போது, ​​எங்கள் ஊழியர்கள் தங்கள் செயல்திறனில் சிறந்து விளங்க முடியும் என்று நம்புவதாகவும், அதனால் தான் இந்த புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Swiggy கூறி இருக்கிறது. கடந்த வாரம் ஸ்விக்கி தனது நிறுவனத்தின் பெரும்பாலான ரோல்களுக்கு permanent work-from-anywhere பாலிசியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Swiggy

அடுத்த செய்தி