பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக Swiggy-யின் CEO-வான ஸ்ரீஹர்ஷா, ஊழியர்களுக்கு எழுதி இருக்கும் இமெயில் கடிதத்தில், பல விருப்பங்களை அலசி ஆராய்ந்த பின் எடுக்கப்பட்ட மிக கடினமான முடிவு இது என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து செலவுகளை குறைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் Swiggy-யும் இணைந்துள்ளது.
சவாலான குறுகிய பொருளாதார சந்தை மற்றும் அதன் உணவு விநியோக வணிகத்தின் வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலை உள்ளிட்டவற்றை இந்த அதிரடி பணிநீக்கத்திற்கான காரணமாக நிறுவனம் கூறி இருக்கிறது. ஸ்ரீஹர்ஷா மஜேட்டி அனுப்பி இருக்கும் இமெயிலில் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்கு ஊழியர் உதவித் திட்டத்தை (employee assistance plan) வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதன்படி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களின் பதவிக்காலம் மற்றும் தர அடிப்படையில் 3-6 மாதங்களுக்குள் கேஷ் பேஅவுட் செலுத்துவதாக அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் உறுதிசெய்யப்பட்ட மூன்று மாத ஊதியம் அல்லது அறிவிப்புக் காலம் மற்றும் நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் 15 நாட்கள் இழப்பீடு மற்றும் பாலிசியின்படி சம்பாதித்த மீதி விடுப்பு இரண்டில் எது அதிகமோ அதை பெறுவார்கள். இது பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 3 மாத ஊதியத்தை உறுதி செய்யும். ஜாயின்ட் போனஸ், ரிட்டென்ஷன் போனஸ் பெய்டு அவுட் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அந்த இமெயிலில் கூறப்பட்டுள்ளது.
உணவு விநியோகத்திற்கான வளர்ச்சி விகிதம் எங்கள் கணிப்புகளுக்கு எதிராக குறைந்துள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட லாப இலக்குகளை அடைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த மறைமுக செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு, அலுவலகம்/வசதிகள் போன்ற பிற மறைமுக செலவுகள் மீதான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், ஒட்டுமொத்த பணியாளர்களின் செலவுகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இமெயிலில் குறிப்பிட்டுள்ளார். ஸ்விக்கி தனது அவுட்பிளேஸ்மென்ட் செல் மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு career transition support-ஐ வழங்கும்.
2021-ஆம் ஆண்டில் தொற்றின் இரண்டாவது அலையின் போது தேவை அதிகரித்ததால், எங்கள் உணவு விநியோக வணிகம் மிகவும் வலுவாக வளர்ந்தது. கூடுதலாக Instamart மூலம் வலுவான வெற்றி கண்டோம். எனவே எதிர்காலத்தை நோக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குழுக்களை உருவாக்க முதலீடு செய்தோம். முந்தைய நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,616.9 கோடியாக இருந்த நிலையில், சமீபத்திய நிதியாண்டில் இது ரூ.3,628.9 கோடியாக இருக்கிறது. எங்களுடைய பண கையிருப்பு, வானிலை கடுமையான சூழ்நிலைகளுக்கு அடிப்படையாக நல்ல நிலையில் இருக்க அனுமதிக்கும் அதே வேளையில், இதை ஒரு ஊன்றுகோலாக மாற்ற முடியாது, மேலும் நமது நீண்ட காலப் பாதுகாப்பிற்கான செயல்திறனைத் தொடர்ந்து அடையாளம் காண வேண்டும் என ஊழியர்களுக்கான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி திட்ட விவரங்கள்:
- பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மே 31, 2023 வரை மருத்துவ காப்பீடு.
- மார்ச் 31, 2023 வரை LinkedIn learning மற்றும் நிறுவனத்தின் வெல்னஸ்போர்ட்டலுக்கான தொடர்ச்சியான அணுகல்
- கடந்த ஓராண்டில் ரீலொக்கெட்டானவர்கள் அவர்கள் முந்தைய இருப்பிடத்திற்கோ அல்லது நிரந்தர முகவரிக்கோ இடமாற்றம் செய்ய தேர்வுசெய்தால், அவர்களது இடமாற்றச் செலவுகள் திருப்பி செலுத்தப்படும்.
- பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கான புதிய வேலையை தேடி கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி மடிக்கணினிகளை தக்க வைத்து கொள்ளலாம்.
Also Read : கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிப்பதற்கான காரணங்கள் இங்கே..!
பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு:
வேலை நீக்கத்தால் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு Swiggy-ன் CEO அனுப்பியுள்ள இமெயிலில், உங்கள் அனைவருக்கும் இது கடினமாக இருக்கும். உங்களுடன் பணிப்புரிந்த நண்பர்கள் பணியிலிருந்து நீக்கி இருக்கிறோம். இதைப் பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்து தான் முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது, ஆனால் எங்கள் முன்னோக்கிய பயணத்திற்கு அவசியம் என்பதை இங்கே கூறி கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
எங்களின் கவனம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்விக்ஸ்டர்கள் மீது உள்ளது மற்றும் அக்கறையுடனும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்கிறோம். எங்கள் வணிகமும் ஒட்டுமொத்தச் செயல்பாடும் மிகவும் ஊக்கமளிக்கும் பாதையில் உள்ளது, மேலும் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை நாம் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food Delivery App, Swiggy, Unemployment