வங்கிச் சேமிப்புக் கணக்கை விட அதிகமாக சம்பதிக்கலாம்... ஆட்டோ-ஸ்வீப் கணக்குகள் பற்றிய விவரங்கள்

பணம்

ஒவ்வொரு வங்கியும் ஆட்டோ-ஸ்வீப் கணக்குகளை வித்தியாசமாக வடிவமைக்கின்றன மற்றும் அத்தகைய தயாரிப்புகளுடன் தொடர்புடைய வெவ்வேறு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கொண்டுள்ளன.

 • Share this:
  ஸ்வீப் கணக்கு என்றால் என்ன?

  ஒவ்வொரு முறை உங்கள் வங்கிக் கணக்கின் இருப்பு குறிப்பிட்ட தொகையை அல்லது வரம்பை விட அதிகமாகும் போது, கூடுதல் தொகை வைப்புத்தொகைக்கு மாற்றப்படுகிறது.

  உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்கு பெரிய அளவில் வட்டி கிடைக்காது. ஏனென்றால், பெரும்பாலான முன்னணி வங்கிகள், சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதங்கள் 2.7 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம், இருப்பின் அளவைப் பொறுத்து வேறுபடலாம். சில வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் 6 சதவீதம் வரையிலான அதிக வட்டியை வழங்குகின்றன.

  சேமிப்புக் கணக்கில் நிதிகள் இருப்பதால் மிகப்பெரிய நன்மை, தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ள எளிதாக இருப்பது தான். ஆனால், நீங்கள் ஒரு சேமிப்புக் கணக்கிலிருந்து நிதியை வங்கி வைப்புகளுக்கு மாற்ற விரும்பினால், ஏதேனும் தேவை இருக்கும்போது வைப்பு நிதியில் இருந்து தொகையை எடுக்க முடியுமா?

  இதற்கான தேர்வு, வங்கியில் ஒரு ஸ்வீப்-இன் கணக்கைத் திறப்பதே ஆகும். இது சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது, ஆனால் நிதிகளை எப்போது வேண்டுமானாலும் எடுக்கக்கூடிய, லிக்விட் ஃபண்ட்ஸ் என்ற அளவில் வைத்திருக்கும்.

  ஒரு ஸ்வீப்-இன் கணக்கில், நீங்கள் FD க்களுக்கு கிடைக்கும் வட்டியை பெறுவீர்கள் மற்றும் சேமிப்புக் கணக்கில் இருக்கும் லிக்விடிட்டியைப் பெறுவீர்கள். பெரும்பாலான வங்கிகளில், சேமிப்புக் கணக்கில் வழங்கப்படுவதை விட வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. “ஒரு ஸ்வீப்-இன் கணக்கில், உங்கள் சேமிப்புக் கணக்கு இருப்பு ஒரு குறிப்பிட்ட தொகை வரம்பை மீறும் போது, ​​உபரித்தொகை ஒரு வைப்பு நிதியாக மாற்றப்படும். வைப்பு நிதியில் அதிக வட்டி விகிதங்களை ஈட்டும்போது, அதே பணம் சேமிப்புக் கணக்கில் இருப்பதை விட கூடுதல் தொகையை ஈட்டுகிறது என்பதை இது உறுதி செய்கிறது” என்று BankBazaar.com இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகிறார்.

  ஒரு ஸ்வீப்-இன் கணக்கு எவ்வாறு செயல்படுகிறது என்று எளிமையாக கூற வேண்டுமென்றால், உங்களிடம் சேமிப்புக் கணக்கில் ரூ .1.2 லட்சம் இருந்தால், நீங்கள் ரூ. 20,000 சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கலாம். மீதமுள்ள 1 லட்ச ரூபாயை எஃப்.டியாக மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு ரூ .20,000 க்கு மேல் பணம் ஏதேனும் தேவைப்பட்டால், மீதமுள்ள தொகைக்கு, வட்டி இழக்காமல் எஃப்.டியில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

  இந்த கணக்குகளை எல்லா வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருக்கலாம். அது மட்டுமின்றி, மேலும் அவற்றை வழங்கினாலும் கூட, அதற்காகக் குறிப்பிட்ட நிபந்தனைகள் இருக்கலாம். "பெரும்பாலான வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்யக்கூடிய ஆட்டோ-ஸ்வீப் சேமிப்பு கணக்கு உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு வங்கியும் ஆட்டோ-ஸ்வீப் கணக்குகளை வித்தியாசமாக உருவாக்குகின்றன. மேலும் இதுபோன்ற கணக்குகளுடன் தொடர்புடைய பல்வேறு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார் ஷெட்டி.

  இவை எவ்வாறு வேறுபடுகின்றன?

  வங்கியில் ஸ்வீப்-இன் கணக்கைத் திறக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன. குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை மற்றும் ஆரம்பத் தொகையின் வரம்பு. "வெவ்வேறு வங்கிகள் தங்கள் ஆட்டோ-ஸ்வீப் வசதிக்காக வெவ்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஒரு வங்கி குறைந்தபட்ச சராசரி இருப்பு (MAB) ரூ. 25,000 ஆகவும், மற்றொரு வங்கி ரூ. 50,000 ஆகவும் அமைக்கலாம். உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள பணம், குறைந்தபட்ச சராசரி இருப்புக்கு மேலே இருக்கும் பட்சத்தில், உபரியாக இருக்கும் தொகையில், எஃப்.டி.க்கு மாற்ற மற்றொரு வங்கி உங்களை அனுமதிக்கலாம். எஃப்.டி.யின் நுழைவுத் தொகையின் வரம்பும் வங்கியால் நிர்ணயிக்கப்படலாம்” என்கிறார் ஷெட்டி.

  இவை அனைத்தும் பல்வேறு காரணங்களுக்காக உங்களுக்கு பொருத்தமானதாக இல்லாமல் போகலாம். உதாரணமாக, ஒரு வங்கி சராசரி இருப்புத் தொகையை ரூ.40,000 ஆகவும், எஃப்டி வரம்புத் தொகையை ரூ. 10,000 ஆகவும் நிர்ணயிக்கலாம். எனவே, உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.100,000 இருந்தால், ரூ. 60,000 தானாக ரூ.10,000 மதிப்புள்ள 6 வைப்பு நிதிகளாக மாற்றப்படும். நீங்கள் பணத்தை எடுக்கும்போது, ​​சேமிப்புக் கணக்கில் உள்ள நிதி பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சேமிப்புக் கணக்கில் உங்களிடம் போதுமான நிதி இல்லையென்றால், உங்கள் வைப்பு நிதியிலிருந்து திரும்பப் பெறுவதன் மூலம் பற்றாக்குறையை சுலபமாக சமாளித்து விடலாம்” என்று ஷெட்டி தெரிவிக்கிறார்.

  கவனிக்க வேண்டியவை :

  ஸ்வீப்-இன் கணக்கில் உங்களுக்கு சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகையை விட வட்டி விகிதம் கூடுதலாகக் கிடைக்கும். வைப்பு நிதியில் இருக்கும் தொகையை குறிப்பிட்ட காலம் வரை எடுக்க முடியாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அதிலும் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.

  அனைத்து இடங்களிலும், ஸ்வீப்-இன் கணக்குகள் பெரிய நன்மையாக செயல்படாது. "நீங்கள் எஃப்.டி.யிலிருந்து அடிக்கடி பணம் எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் வட்டி இழக்கக் கூடும். ஏனென்றால், வங்கியில் வைப்பு நிதி எவ்வளவு நாட்கள் இருந்தது என்ற எண்ணிக்கையை கணக்கில் கொண்டு வட்டி கணக்கிடப்படுகிறது. இவ்வாறு வைப்பு நிதியின் டெனர் ஒரு வருடமாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் 45 நாட்களுக்குள் அந்தத் தொகையை திரும்பப் பெற்றிருந்தால், வட்டி 45 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், நீங்கள் பணத்தை குறைந்தது 30 நாட்களுக்கு வைத்திருக்காவிட்டால், பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு மிகக் குறைந்த வட்டியை வழங்குகிறது. அதாவது, நீங்கள் வைப்பு நிதியில் 30 நாட்களுக்கு மேல் பணத்தை வைத்திருந்தால் மட்டுமே, எஃப்.டி.க்கு உபரித்தொகையை மாற்றுவது மட்டுமே உங்களுக்கு நன்மை பயக்கும். இல்லையெனில், சேமிப்புக் கணக்கே உங்களுக்கு சரியானதாக இருக்கும்” என்று ஷெட்டி அறிவுறுத்துகிறார்.
  Published by:Karthick S
  First published: