முகப்பு /செய்தி /வணிகம் / ஸ்வீடனில் 60 சதவீதம் வரை வரி - மகிழ்ச்சியாகச் செலுத்தும் மக்கள்.. காரணம் தெரியுமா?

ஸ்வீடனில் 60 சதவீதம் வரை வரி - மகிழ்ச்சியாகச் செலுத்தும் மக்கள்.. காரணம் தெரியுமா?

ஸ்வீடன்

ஸ்வீடன்

இந்தியாவில் மாத சம்பளம் பெறுவோருக்கு அதிகபட்சமாக 30% வரி விதிக்கப்படுகிறது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் சுமார் 60% வரை வரி வசூலிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • international, IndiaSwedenSwedenSwedenSweden

பிறப்பு இறப்பைப் போல, இந்த நாட்டில் வரியில் இருந்தும் தப்பிக்க முடியாது என்ற சொல்லாடல் இந்த நாடுகளில் மிகப்பிரபலம். இதற்குக் காரணம் நாடுகளில் வசூலிக்கப்படும் வரிகளே காரணம். அந்த வரிசையில் உலக அளவில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இரண்டாம் இடம்பிடித்திருப்பது ஸ்வீடன். ஆனால் இங்குதான் மக்கள் மிக மகிழ்ச்சியாக வரி செலுத்துகின்றனர்.

இந்நாட்டில் தனி நபர் வருமான வரி மிகக்குறைந்த அளவாக ஒருவரின் வரி 29 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்சமாக 60 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் வருமான வரி குறித்து எப்போதும் மக்கள் விமர்சனங்களையே முன்வைப்பர். ஆனால் ஸ்வீடனிலோ முற்றிலும் மாறாக மக்கள் மிக மகிழ்ச்சியாக வரி செலுத்துகின்றனர்.

சமூக நலத்திட்டங்கள்:

இதற்கு ஸ்வீடனில் செயல்படுத்தப்படும் சமூக நலத் திட்டங்களே காரணம். மேலும் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் செலுத்தும் வரி, ஸ்வீடனில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும், நாட்டு நலனுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளக்குறியீட்டில் உலகளவில் சுவீடன் 6 ஆம் இடத்தில் உள்ளது.

பிறப்பு முதல் இறப்பு வரை கைகொடுக்கும் திட்டங்கள்:

ஸ்வீடன் குடிமக்களுக்குப் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிகள், சமூக நலத்திட்டங்களாக அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்குக் கருவுறும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறையை எடுத்துக்கொள்வோம்.

ஸ்வீடனில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியர் 80% ஊதியத்துடன் 480 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை எடுக்க முடியும். இந்த விடுமுறையைக் கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து எடுத்துக்கொள்ள முடியும். அதாவது கணவன் 50 நாட்களும், மனைவி 430 நாட்களும் என்று பகிர்ந்து எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு. இந்த விடுமுறைக் காலத்தில் அவர்களுக்கு 80% ஊதியமும் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு விடுமுறை கூடுதலாகத் தேவைப்படும் பட்சத்தில் 60-70% ஊதியத்துடன், விடுமுறை நீட்டிப்பும் உண்டு.

முற்றிலும் இலவச கல்வி:

குழந்தை வளர்ந்ததும், அக்குழந்தைக்குத் தேவையான ஆரம்பக் கல்வி முதல் இலவசமாகவே வழங்கப்படுகிறது. மேலும் அக்குழந்தைக்குத் தேவையான மதிய உணவும் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இருப்பதால் ஸ்வீடன் வாசிகள் மகிழ்ச்சியுடன் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

அதே, ஸ்வீடனில் இலவச மருத்துவ வசதிகளும் உண்டு, அதிலும் குறிப்பாக 18 வயது வரை குழந்தைகளுக்கு ஏற்படும் பல் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளும் இலவசமாகவே வழங்கப்படும் வகையில் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி என்பது ஸ்வீடனில் நடைமுறையில் உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகையும், சிறந்த சிகிச்சையும் வழங்கும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளது.

மேலும் இக்குழந்தைகளைப் பராமரிக்கச் சிறப்பு நிதியாக ஒவ்வொரு ஆண்டும் 1080 யூரோக்கள் வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடனில், பள்ளியில் இருந்து வரும் தங்கள் குழந்தையை அழைத்து வர, தாயோ அல்லது தந்தையோ அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே செல்ல நேர்ந்தால், அந்த 1 மணி நேரத்திற்கான ஊதியத்தை அரசே வழங்கும் வகையில் திட்டம் உள்ளது.

முற்போக்கான முதியோர் ஓய்வூதிய திட்டங்கள்:

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்வீடனில் இருக்கும் முக்கிய திட்டங்களுள் சிறப்பு வாய்ந்தது முதியோர் பாதுகாப்பு திட்டங்களும், ஓய்வூதியமும் தான். ஸ்வீடன் ஓய்வூதிய திட்டம் மிகவும் முற்போக்கான திட்டங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இங்கு தாங்கள் ஓய்வு பெறும் வயதை ஊழியர்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். உதாரணமாக 61 வயதிலும் ஒருவர் ஓய்வு பெறலாம். அல்லது 70 வயதிலும் ஒருவர் ஓய்வு பெறலாம். எவ்வளவு அதிகமாகக் காலம் ஒருவர் பணிபுரிகிறாரோ, அவரின் ஓய்வூதியமும் அந்தளவு அதிகரிக்கும்.

ஒருவர் போதிய காலம் பணிபுரியாமல் இருந்தால், அவருக்கு மிகக் குறைந்தபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஸ்வீடன் குடிமகனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையும் அரசு தங்கள் கடமையாகக் கருதுகிறது. அவ்வாறு ஒருவருக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனில், அவர் இதற்கு முன்பு பெற்ற ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு 80% தொகை உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த தொகையைக் காப்பீட்டு நிறுவனங்களும், மக்கள் வரிப்பணத்தில் இருந்தும் பங்கீட்டு வழங்கப்படுகிறது. மேலும் வேலையில்லாமல் இருக்கும் ஒருவருக்கும் பணி வாய்ப்புகளையும், அரசே வழங்கும், அவருக்கு போதிய அளவு திறன்கள் இல்லாவிட்டால், உரியப் பயிற்சி வழங்கும் வகையில் ஸ்வீடனில் பல்வேறு திட்டங்கள் உண்டு.

Also Read : மீண்டும் ஷாக்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!

ஸ்வீடனில் வாழும் குடிமகன் ஒருவர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வது தெரியவந்தால், அவ்வூரில் உள்ள மாவட்ட நிர்வாகமே அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுப்பது மட்டுமல்லாமல், வாடகை கட்டணத்தைச் செலுத்தும் வகையில் உதவித்தொகை வழங்கவும் திட்டங்கள் உண்டு.

பிறப்பு முதல், இறப்பு வரை அரசின் திட்டங்கள் தங்களுக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாலேயே குடிமக்களும் தங்கள் வருவாயில் 60 சதவீதம் வரை வரியாகச் செலுத்த எந்த தயக்கமும் காட்டுவதில்லை. மக்களிடம் இருந்து வரி வசூலிப்பது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் வளர்ச்சியை உலக அரங்கில் மேம்படுத்துவதற்காகத் தான். அப்படி இருக்க ஸ்வீடன் அதனைச் சிறந்த முறையில் செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

First published:

Tags: Income tax