நிதி நிறுவனமாக செயல்படும் பிரபல சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியில் மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எஃப்.டி மற்றும் ஆர்டி என்றழைக்கப்படும் பிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் ஆகிய 2 சேமிப்புகளில் முதலீடு செய்ய சமீபகாலமாக பொது மக்கள் தொடங்கி முதலீட்டாளர்களும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். எப்போதுமே இந்த இரண்டு திட்டங்களிலும் சேமிப்பை முதலீடு செய்ய திட்டமிடுவதற்கு முன்னர், இவை இரண்டிருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் நன்மைகள் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வட்டி பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்த பின்னர் தான் முதலீட்டில் இறங்க வேண்டும்.
ரிஸ்க் எடுக்க தயங்கும் முதலீட்டாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் சிறந்த தேர்வாக இருக்கிறது. இதில் நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. வங்கிகள் அல்லது NBFC-க்களால் வழங்கப்படும் நிதி திடமான இது முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மெச்சூரிட்டி தேதி வரை வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட்டை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரே முறை தான் பணத்தை போடுவீர்கள். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகையையும் பெறுவீர்கள்.
இப்படி பல சலுகைகள் கிடைப்பதால் பலரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக போஸ்ட் ஆபீஸ், பொது வங்கிகளை காட்டிலும் தனியார் நிதி நிறுவனங்கள், ஸ்மால் ஃபினாஸ் ஆகியவற்றில் பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு அதிக வட்டி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்சமயம் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இதுவரை வழங்கிய வந்த வட்டியில் மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி மாற்றம் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை உள்ள கணக்குகளுக்கு பொருந்தும்.
6 மாதம் முதல் 9 மாதம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 4.75% வட்டி,9 மாதம் முதல் 12 மாதம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.25% வட்டி, 12 மாதம் 15 மாதம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.50% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6.50% வட்டி 18 மாதம் முதல் 21 மாதம் 21 முதல் 24 மாதங்களுக்குள்ளான திட்டங்களுக்கும் பொருந்தும்.
3 ஆண்டுகளுக்கு மேல், 5 ஆண்டுகளுக்குள் - 6.75%
5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை : 6%
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Fixed Deposit, Savings