Home /News /business /

டிடர்ஜெண்ட், குளியல் சோப் விலை உயர்வு - இல்லத்தரசிகள் ஷாக்!

டிடர்ஜெண்ட், குளியல் சோப் விலை உயர்வு - இல்லத்தரசிகள் ஷாக்!

soaps

soaps

இந்துஸ்தான் யுனிலிவர் பொருட்களிலேயே அதிக விலை உயர்வை சர்ஃப் எக்ஸெல் சந்தித்திருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டிடர்ஜெண்ட் மற்றும் சோப் ரகங்களின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவின் அதிக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், தனது லாண்ட்ரி மற்றும் உடல் சுத்தப்படுத்தும் பொருட்கள் பிரிவில் உள்ள பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம் அந்நிறுவன டிடர்ஜெண்ட் மற்றும் சோப்களை வாங்க இனி இந்திய வாடிக்கையாளர்கள் கூடுதலாக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டிடர்ஜெண்ட் பிரிவில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தனது வீல் டிடர்ஜெண்ட் மீதான விலை 3.5% ஆக உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்கள் ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதன்படி முன்னர் 28 ரூபாய் விலை கொண்டிருந்த அரை கிலோ பாக்கெட் தற்போது 29 ரூபாய்க்கும், 56 முதல் 57 ரூபாய் வரை விலை கொண்டிருந்த ஒரு கிலோ பாக்கெட் 58 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் ரின் பவுடரின் விலையும் 6 முதல் 8 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரின் பவுடரின் விலை 77 ரூபாயில் இருந்து 82 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல சிறிய பாக்கெட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய் பாக்கெட்களின் எடை 150 கிராம்களில் இருந்து 130 கிராம்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Also Read:  இந்திய ரசிகரின் செயலால் ஷாக் ஆன மியா கலிஃபா!

இந்துஸ்தான் யுனிலிவர் பொருட்களிலேயே அதிக விலை உயர்வை சர்ஃப் எக்ஸெல் சந்தித்திருக்கிறது. அதனுடைய ஒரு கிலோ பாக்கெட்டின் விலை 14 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர லக்ஸ் மற்றும் லைஃபாய் குளியல் சோப்களின் காம்போ பேக்குகளின் விலை 8 முதல் 12 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 சோப்கள் கொண்ட லக்ஸ் பாக்கெட்டின் விலை 120 ரூபாயில் இருந்து 128 முதல் 130 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

Also Read: உன் மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கேட்ட முதியவர்: அடுத்து நடந்தது என்ன?

உள்ளீட்டு பொருட்களின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டிருப்பதால் தனது பொருட்களில் டீ முதல் டிடர்ஜெண்ட் வரை இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் விலை ஏற்றம் செய்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published:

Tags: Business, Soap

அடுத்த செய்தி