பிஎஃப் பங்களிப்புக்கு புதிய விதி; உச்ச நீதிமன்றம் அதிரடி!

வருங்கால வைப்பு நிதி கணக்கில் அடிப்படை ஊதியத்திலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக 12 சதவீதமும், நிறுவனம் சார்பாக 12 சதவீத பங்களிப்பும் செலுத்தப்படும்.

பிஎஃப் பங்களிப்புக்கு புதிய விதி; உச்ச நீதிமன்றம் அதிரடி!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: March 2, 2019, 3:58 PM IST
  • Share this:
மாத சம்பளத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திற்கு மட்டுமே நிறுவனங்கள் பிஎஃப் பிடித்து வந்தன. அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக, சிறப்பு அலவன்ஸ் பங்களிப்பையும் சேர்த்து பிஎஃப் பிடித்தம் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அடிப்படை ஊதியம் குறித்துத் தொடுக்கப்பட்ட வழகிற்கு தீர்ப்பளித்த போது, சிறப்பு அலவன்ஸ்களும் இதற்குள் வரும். அவற்றுக்கும் சேர்த்துப் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

பிஎஃப் கணக்கில், அடிப்படை ஊதியத்திலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக 12 சதவீதமும், நிறுவனம் சார்பாக 12 சதவீத பங்களிப்பும் செலுத்தப்படும். தற்போது உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அலவன்ஸ்களும் அடிப்படை ஊதியம்தான் என்று கூறியது உச்சநீதிமன்றம்.


எனவே இந்த வழக்கு குறித்த தீர்ப்பை, வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. பிஎஃப் பங்களிப்புக்கான புதிய விதி திருத்தங்கள் குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பிஎஃப் பங்களிப்பில் சிறப்பு அலவன்ஸ் இல்லாத போது நிறுவனங்களுக்குச் செலவு குறைவாக இருந்தது. எனவே தங்களது செலவைக் குறைக்க விரும்பிய நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தைக் குறைத்து, பிற சலுகைகளை உயர்த்தி விடுகின்றன. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்தும் போது கைக்கு வரும் மாத சம்பளம் குறையும் என்றே தோன்றுகிறது. அதே நேரம் பிஎஃப் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் பார்க்க:
First published: March 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading