மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்குபவர்களுக்கும் பென்ஷன்...! உச்ச நீதிமன்றம் அதிரடி!

புதிய திருத்தங்களின் படி 15,000 ரூபாய்க்குள் ஒருவரின் சம்பளம் இருக்கும் போது நிறுவனத்தின் 12 சதவீத பிஎஃப் பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்குபவர்களுக்கும் பென்ஷன்...! உச்ச நீதிமன்றம் அதிரடி!
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: April 3, 2019, 11:20 AM IST
  • Share this:
பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஈ.பி.எஸ் (Employee Pension Scheme) எனப்படும் பென்ஷனும் உள்ளது. இந்த பென்ஷன் சேவையில் 2014-ம் ஆண்டு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அந்த திருத்தத்தின் படி அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி என இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் உள்ள போது ஈபிஎஸ் பங்களிப்பு பிடிக்க தேவையில்லை என்று கூறப்பட்டது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரின் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதம் பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதி திட்டம் கீழ் டெபாசிட் செய்யப்படும். ஆனால் நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவீதம் மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு அளிக்கப்படும். மீதமுள்ள 8.33 சதவீதம் ஈபிஎஸ் என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.


2014-ம் ஆண்டு செய்த புதிய திருத்தங்களின் படி 15,000 ரூபாய்க்குள் ஒருவரின் சம்பளம் இருக்கும் போது நிறுவனத்தின் 12 சதவீத பிஎஃப் பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது.

ஈபிஎப்ஓ


இதை எதிரித்து கேரளா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 15,000 ரூபாய் வரம்புகள் ஏதுவும் ஈபிஎஸ் பென்சன் திட்டத்தில் இருக்க கூடாது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.Read Also... இன்ஸ்டண்ட் பீர் மிக்ஸ்: வாடிக்கையாளர்களை ஏப்.1-ல் முட்டாளாக்கிய கிங்ஃபிஷர்!

கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் பார்க்க:

மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்....

 

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading