ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த மூன்று மாத மாதத்தவணை செலுத்தும் அவகாசக் காலத்துக்கும் சேர்த்து, வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது எஸ்பிஐ வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், அவகாசம் வழங்கப்பட்ட காலத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வங்கிகள் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து பேசிய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், அவகாசம் வழங்கப்பட்டுள்ள மாதங்களுக்கு மேலும் வட்டி வசூலிப்பது சரியல்ல என்றார்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் மூன்று நாட்களில் ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கு விசாரணையை வருகிற 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.