Home /News /business /

எஸ்பிஐ மூலமாக ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தில் இணையலாம் - வழிமுறைகள் இதோ…

எஸ்பிஐ மூலமாக ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தில் இணையலாம் - வழிமுறைகள் இதோ…

செல்வ மகள்  சேமிப்பு

செல்வ மகள் சேமிப்பு

Sukanya Samriddhi Yojana : பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள பெற்றோருக்காக மத்திய அரசு வழங்கும் சேமிப்புத் திட்டம் இது. சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலமாக கூடுதலான வட்டி மற்றும் இதர சலுகைகளை பெற முடியும்.

மேலும் படிக்கவும் ...
பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள பெற்றோருக்காக மத்திய அரசு வழங்கும் சேமிப்புத் திட்டம் இது. சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலமாக கூடுதலான வட்டி மற்றும் இதர சலுகைகளை பெற முடியும்.

இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி வைத்தார். 2022 ஜனவரி - மார்ச், தற்போதைய காலாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றபடி, இது பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் ஆகும். இதில், 2 பெண் குழந்தைகள் அல்லது இரட்டையர்களாக இருக்கும் பட்சத்தில் 3 பெண் குழந்தைகளை இணைக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் வாயிலாக இந்தத் திட்டத்தில் கணக்குகளை தொடங்கலாம். இதில், எஸ்பிஐ வங்கி மூலமாக நீங்கள் இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

பயனாளியின் பிறப்புச் சான்றிதழ்
பயனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய முகவரி சான்று மற்றும் அடையாள அட்டை
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க, முகவரி சான்று மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவதுடன், இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவம் :   https://sbi.co.in/documents/16012/9067486/01032021_New+forms+of+SSA.pdf/4c7be90c-81fe-9276-6c14-e8bca6cbbe66?t=1614605064573

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்களுடன் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு செல்லவும்.
கணக்கு துவங்குவதற்கு நீங்கள் முதல்கட்ட டெபாசிட் தொகையாக ரூ.250 செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில், ஆன்லைன் மூலமாக இந்த கணக்கு தொடங்க வாய்ப்பில்லை.

இதையும் படியுங்கள் :  தினமும் ரூ. 200 சேமிப்பு உங்களை லட்சாதிபதி ஆக்க போகிறது தெரியுமா?

திட்டத்தின் சிறப்புகள்

  • ஒரு நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.250 ஆகும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம்

  • ஒரு பெண் குழந்தை 10 வயது அடையும் வரை மட்டுமே இந்த கணக்கை தொடங்க முடியும்.

  • ஒரு பெண் குழந்தையின் பெயரில், ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

  • அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில், கணக்கு தொடங்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

  • இந்த கணக்கில், வித்ட்ராவல் வசதி என்பது, பயனாளியின் உயர் கல்விக்காக பெற்றுக் கொள்ளலாம்.

  • 18 வயதுக்கு முன்பாக பெண் குழந்தைக்கு திருமணம் செய்யப்பட்டால், கணக்கு முடித்து வைக்கப்படும்.

  • இந்தியாவில் உள்ள எந்த வங்கியின் கிளை அல்லது அஞ்சல் அலுவலத்திற்கும் இதனை டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்.
    கணக்கு தொடங்கி 21 ஆண்டுகள் கழித்து மெட்சூரிட்டி தொகை கிடைக்கும்.

  • 80சி படிவத்தின் படி, இந்தக் கணக்கில் செலுத்தப்படும் டெபாசிட் தொகைக்கு வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

  • கணக்கு தொடங்கிய 15 ஆண்டுகள் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: SBI, Sukanya Samriddhi Yojana

அடுத்த செய்தி