ஹோம் /நியூஸ் /வணிகம் /

நல்ல பலன் தரும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - தகுதி, வட்டி விகிதங்கள் என்ன?

நல்ல பலன் தரும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - தகுதி, வட்டி விகிதங்கள் என்ன?

பணம்

பணம்

இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் திட்டம் 15 ஆண்டுகளாகவும், முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகவும் இருக்கிறது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

பெண் குழந்தைகளை கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகளின் எதிர்காலத்தை நினைத்து சேமிப்பில் அதிகம் செலுத்தி வருகிறார்கள். தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து நன்மைகளை பெறலாம். மத்திய அரசு வழங்கும் இந்த சேமிப்பு திட்டத்தில் உள்ள மிக பெரிய வசதி என்னவென்றால், உங்களின் விருப்பம் மற்றும் தேவைகளைப் பொறுத்து உங்களது செல்வ மகள் சேமிப்பு அக்கவுண்ட்டை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு அல்லது ஒரு தபால் நிலையத்திற்கு மாற்றி கொள்ளலாம்.

இந்த திட்டம் சந்தையில் உள்ள சிறிய சேமிப்புத் திட்டங்களை விட அதிக நன்மைகளை வழங்குகிறது குறிப்பாக மத்திய அரசின் ஆதரவின் கீழ் இத்திட்டம் இருப்பது இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து 10 வயது வரை அதன் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் இந்த திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியும். குறிப்பிட்ட பெண் குழந்தை 18 வயதை எட்டியதும் அன்று முதல் அவர் அந்த அக்கவுண்ட் ஹோல்டர் ஆகி விடுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் திட்டம் 15 ஆண்டுகளாகவும், முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகவும் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 2 அக்கவுண்ட்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் இரட்டை அல்லது 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறக்கும் பட்சத்தில் 2-க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்கள் ஓபன் செய்து கொள்ள முடியும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் டெப்பாசிட் விதிகள்:

இந்த அக்கவுண்ட்டை எந்த ஒரு அரசு வங்கி அல்லது தபால் நிலையத்திலும் ஆரம்ப டெபாசிட் ரூ .250 உடன் துவக்கலாம். ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 250 ரூபாய் வைப்புத்தொகையை பராமரிக்க வேண்டும், அப்படி செய்ய தவறினால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும். வருடாந்திர குறைந்தபட்ச டெப்பாசிட் வரம்பை பராமரிக்க தவறும் அக்கவுண்ட், டிஃபால்ட்டட் அக்கவுண்ட்டாக (defaulted account) மாறும். ஒவ்வொரு ஆண்டும் அபராதம் செலுத்துவதன் மூலமோ அல்லது குறைந்தபட்சம் 250 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமோ டிஃபால்ட்டட் அக்கவுண்ட்டை, இயல்புநிலை அக்கவுண்ட்டாக ஆக்கி கொள்ள முடியும்.

இந்த அக்கவுண்ட்டில்டெப்பாசிட் தொகையின் உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறி செலுத்தப்படும் எந்தவொரு டெப்பாசிட் தொகையும் உடனடியாக டெப்பாசிட்டருக்கு திருப்பித் தரப்படும்.

வட்டி விகிதம் மற்றும் வரி நன்மைகள்

செப்டம்பர் 2021ல் முடிவடையும் காலாண்டில், சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டியானது ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் விலக்கு பெற தகுதியுடையது. அதே போல இந்த திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

முன்கூட்டியே அக்கவுண்ட்டை மூடலாமா?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட அக்கவுண்ட்டை ஓபன் செய்ததிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே முடித்து கொள்ள முடியும். அக்கவுண்ட் வைத்திருப்பவருக்கு கடுமையான நோய் ஏற்படுவது அல்லது சிறுமியின் சார்பாக கணக்கை நிர்வகித்து வந்த பாதுகாவலரின் மரணம் போன்ற காரணங்களுக்காக சுகன்யா சமிர்தி யோஜனா கணக்கை இடையிலேயே முடித்து கொள்ளலாம். கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு, தேவையான ஆவணங்களுடன் வங்கி அல்லது தபால் நிலையத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Also read... ஆகஸ்ட் 1 முதல் மாத சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ கட்டணத்திற்கு புதிய விதி - மாற்றம் செய்த ஆர்பிஐ

பணத்தை திரும்ப பெறும் விதி :

குறிப்பிட்ட பெண் குழந்தைக்கு 18 வயதாகிவிட்டாலோ அல்லது 10 ஆம் வகுப்பு முடித்ததுமோ இந்த அக்கவுண்ட்டிலிருந்து கணிசமான அளவில் அவர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார். முந்தைய நிதியாண்டின் இறுதியில் இந்த கணக்கில் இருந்த தொகையில் 50% தொகையை கல்வி அல்லது கணக்கு வைத்திருப்பவரின் திருமண நோக்கத்திற்காக எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தவிர விதிகளின்படி தொகை திரும்பப் பெறுவது என்பது ஒரு மொத்த தொகையாகவோ அல்லது தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையோ செய்யலாம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published: