தேர்தல்... சமையல் கேஸ் விலை உயர்வை அடக்கி வாசிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!

கோப்புப் படம் (Photo: Reuters)

மானியமில்லா சிலிண்டர் விலை 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

    ஏப்ரல் மாதம் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் பெரிய மாற்றமில்லை. மறுபக்கம் மானியமில்லா சிலிண்டர் விலை 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதுவே மார்ச் மாதம் 44 ரூபாய் விலை உயர்ந்திருந்தது. மானிய விலை சிலிண்டர் மார்ச் மாதம் 2.19 ரூபாய் விலை உயர்ந்திருந்தது.

    சென்னையில் 14.2 கிலோ மானிய விலை சிலிண்டர் விலை 483.74 ரூபாயாகவும், மும்பையில் 493.57 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 499.00 ரூபாயாகவும், டெல்லியில் 495.86 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    மானியமில்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் 722 ரூபாயாகவும், மும்பையில் 678.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 732.50 ரூபாயாகவும், டெல்லியில் 706.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை சென்னையில் 1405 ரூபாயாகவும், மும்பையில் 1253.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1354.50 ரூபாயாகவும், டெல்லியில் 1305.50 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

    ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயு விலை பெரிய அளவில் உயர்ந்ததற்கு மாற்றம் அடையாததற்குத் தேர்தல் ஒரு காரணமாக உள்ளது.

    மேலும் பார்க்க:





    மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
    Published by:Tamilarasu J
    First published: