• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.133 குறைப்பு!

மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.133 குறைப்பு!

கோப்புப் படம்  (Photo: Reuters)

கோப்புப் படம் (Photo: Reuters)

Subsidised gas price cut by Rs 6.5, Non-subsidised by Rs 133 | ஜூன் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ச்சியாக விலை உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 ரூபாய் 52 பைசாவும், மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதம் தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அறிவிக்கப்படுவதுபோல், சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், நாளை மாதத்தின் முதல் என்பதால் மாற்றியமையக்கப்பட்ட புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Subsidy Cylinder
சிலிண்டர் (கோப்புப்படம்)


புதிய விலைப்படி, வீட்டு உபயோகத்துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான விலை 6 ரூபாய் 52 பைசாக்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14. 2 கிலோ எடைக்கொண்ட மானிய சிலிண்டரின் விலை ரூ. 507 -ஆகவும், மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 942 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விற்கப்படும் விலையின் அடிப்படையில் இந்த விலை குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விலை சிறிய மாற்றங்கள் இருக்கலாம். நவம்பர் மாதம் மானிய விலை சிலிண்டரின் மானியம் ரூ. 433 கிடைத்த நிலையில், டிசம்பர் மாதம் ரூ. 308-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ச்சியாக விலை உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது சிலிண்டர் வாடிக்கையாளர்ளை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: