முகப்பு /செய்தி /வணிகம் / stock market : அதிக லாபம் வேண்டுமா? இதில் தைரியமா முதலீடு செய்யுங்கள்!

stock market : அதிக லாபம் வேண்டுமா? இதில் தைரியமா முதலீடு செய்யுங்கள்!

பங்குசந்தை

பங்குசந்தை

பல ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வழங்குதல் அதிகரித்துள்ளது. அதே சமயம், வங்கிகளில் வாராக்கடன் அளவு குறைந்து வருகிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பங்குச் சந்தைகள் என்றாலே அபாயங்கள் நிறைந்தவை என்று அந்த தொழிலில் ஈடுபடாத சாமானிய மக்கள் கூட சொல்லி விடுவார்கள். ஆனால், நிஃப்டி பங்குச்சந்தை என்னதான் தடுமாற்றங்களை சந்தித்தாலும் இறுதியில் ஒரு நிலையான இடத்தை எட்டும்.

இந்தியாவில் பங்குச் சந்தைகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கடந்த காலங்களில் பங்குகளை வாங்குவதும், விற்பதுவும் தான் டிரெண்ட் ஆக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக பெரும்பாலும் பங்குகளை விற்பது மட்டுமே டிரெண்ட் ஆக இருந்து வருகிறது.

பங்குச் சந்தையில் எல்லா துறைகளும் அபாயகரமானவை அல்ல. சில துறைகள் நல்ல லாபம் தரக் கூடியவை. குறிப்பாக, மக்களின் தேவைகள் எதில் அதிகமாக உள்ளது, நுகர்வு எதை நோக்கி உள்ளது என்பதை கவனித்து அதற்கு ஏற்ற துறையில் முதலீடுகளை செய்ய தொடங்குவது நல்ல பலனை தரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பாக, நீண்ட காலமாக அதில் நிபுணத்துவம் பெற்ற, அனுபவம் கொண்டவர்களிடம் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்றபடி செயல்படுவது இன்னும் சிறப்பான பலனை தரக் கூடியதாக அமையும்.

வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வழங்குதல் அதிகரித்துள்ளது. அதே சமயம், வங்கிகளில் வாராக்கடன் அளவு குறைந்து வருகிறது. இப்போது பல நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் அறிமுகம் ஆகி வரும் நிலையில் இதில் முதலீடு செய்வதன் மூலமாக நிதானமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!

பொறியியல் மற்றும் மூலதன பொருட்கள்

உள்கட்டமைப்பு துறைக்கு என்றுமே அழிவு கிடையாது. அதுமட்டுமன்றி உலகெங்கிலும் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, சீனா போன்ற நாடுகளை தாண்டி வளரும் நாடுகளில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரக் கூடியதாக அமையும்.

ரசாயனங்கள்

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பல ரசாயன ஆலைகளை சீனா மூடி வரும் நிலையில், இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ள தொடங்கியுள்ளன. இனி வரும் காலங்களில் அதிகமான ரசாயன தொழிற்சாலைகள் இங்கும் அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது லாபம் தரும்.

மிடில் கிளாஸ் மக்களும் லட்சாதிபதி ஆகலாம்.. சேமிப்பை இங்கு தொடங்கினால் போதும்!

ஆட்டோமொபைல்

பயணிகளுக்கான கார் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த துறையில் பெரும் தேவைகள் உருவாகி வருகின்றன. ஆகவே, இத்துறையில் முதலீடு செய்வதும் லாபம் தரும். குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு கோலோச்சும் முதலீட்டு துறையாக இது இருக்கும்.

நுகர்வு

நுகர்வு பொருட்கள் போன்றவற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் அதிக செலவு செய்து வருகின்றனர். குறிப்பாக சுற்றுலா செல்வது, பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவது போன்றவை அதிகரித்துள்ளன. இந்த துறையில் ஏராளமான முதலீட்டாளர்கள் களமிறங்கி வருகின்றனர். ஆகவே, இதில் வளம் அதிகரிப்பதற்கும், எதிர்கால பலன்களை பெறுவதற்குமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

First published:

Tags: Business, Share Market, Stock market