இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு ரஷ்யா உக்ரைன் போர் முக்கிய காரணமாக இருந்த நிலையில், போர் இன்னும் முடிவடையாத நிலையிலும் கூட, பல்வேறு காரணிகளால், பங்குச்சந்தைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, HDFC மற்றும் HDFC வங்கி இணைப்பு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம், இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாக HDFC வங்கி உறுவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, பங்குச்சந்தைகளை வழிநடத்தும் காரணியாக ரஷ்யா, உக்ரைன் போர் இருந்து வருகிறது. இருப்பினும், உள்நாட்டு காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க தொடங்கிய முந்தைய நாள், அதாவது பிப்ரவரி 23ம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,232 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்த பிப்ரவரி 24ம் தேதி, சென்செக்ஸ் சுமார் 2,700 புள்ளிகள் சரிந்து 54,529 புள்ளிகள் என்ற நிலைக்கு சரிந்தது. போர் பாதிப்புகள், சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார தாக்கம் போன்ற காரணிகளால், தொடர்ந்து சரிந்த சந்தை, மார்ச் 7 ம் தேதி 52,842 என்று மேலும் சரிந்தது.
பின்னர் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் எல்லாம், போரை முடிவிற்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையில், பங்குச்சந்தைகள் சற்று அதிகரிக்க தொடங்கின. மார்ச் 15ம் தேதி 55,776 புள்ளிகள் என்று இருந்த சென்செக்ஸ் மார்ச் 31ம் தேதி 58,568 புள்ளிகள் வரை அதிகரித்தது. இந்நிலையில், இன்று HDFC இணைப்பு குறித்த செய்தியால், சந்தைகள் மேலும் அதிகரித்து, 60,845 புள்ளிகள் வரை சென்றது.
ALSO READ | Save Soil : சத்குருவின் மண் காப்போம் இயக்கத்திற்கு காமன்வெல்த் நாடுகள் ஆதரவு..!
பிப்ரவரி 23 | 57232 புள்ளிகள் |
பிப்ரவரி 24 | 54529 புள்ளிகள் |
மார்ச் 7 | 52842 புள்ளிகள் |
மார்ச் 15 | 55776 புள்ளிகள் |
மார்ச் 31 | 58568 புள்ளிகள் |
ஏப்ரல் 4 | 60845 புள்ளிகள் |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sensex, Stock market