9 நாட்களுக்கு பின் சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை!

9 நாட்களுக்கு பின் சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை!
பங்குச் சந்தை
  • Share this:
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் 9 நாட்கள் சரிவுக்குப் பின் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

கடந்த 9 வர்த்தக தினங்களில் இந்திய பங்குச்சந்தைகள் 4 சதவிதம் அளவிற்கு சரிந்துள்ளன. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் குறித்த பதற்றங்களால் கடந்த சில தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில், இன்று சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

வர்த்தக போர் தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்காவின் தெளிவான முடிவுகளே இன்றைய உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.


இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 227.71 புள்ளிகள் உயர்ந்து 37,318.53 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73.85 புள்ளிகள் உயர்ந்து 11,2222.05 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மும்பை பங்குச்சந்தையை பொருத்தவரையில் டெக், ஐ.டி., துறை பங்குகளை தவிர டெலிகாம், ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், கட்டுமானம் என அனைத்துத் துறை சார்ந்த பங்குகளும் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தன.

மேலும் பார்க்க:
First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading