Home /News /business /

அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்ட உடன் சரிந்த பங்குச்சந்தை!

அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்ட உடன் சரிந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

சந்தை முடியும் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111.77 புள்ளிகள் என 0.30 சதவீதம் சரிந்து 39,714.20 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 23.10 புள்ளிகள் என 0.19 சதவீதம் சரிந்து 11,922.80 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    நேற்று மாலை இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதை அடுத்து, இன்று காலை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தையும் தொட்டது.

    இன்று பிற்பகல் மத்திய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்குச்சந்தை உடனே சரிவைச் சந்தித்தது.

    பங்குச்சந்தை


    இன்று மாலை சந்தை முடியும் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111.77 புள்ளிகள் என 0.30 சதவீதம் சரிந்து 39,714.20 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 23.10 புள்ளிகள் என 0.19 சதவீதம் சரிந்து 11,922.80 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

    மும்பை பங்குச்சந்தையைப் பொறுத்தவரையில் ஐ.டி., டெக், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம், ஆற்றல் துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டும், ரியாலிட்டி, நிதி, வங்கி, ஆட்டோமொபைல், மெட்டல், மின்சாரம் கட்டுமானத் துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டும் இருந்தன.

    லாபம் அளித்த டாப் 5 பங்குகள்:


    ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ், எச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, இண்டஸ் இண்ட் வங்கி.

    அதிக நட்டம் அடைந்த 5 பங்குகள்:


    யெஸ் வங்கி, ஐடிசி, மஹிந்தரா & மஹிந்தரா, வேதாந்தா, என்டிபிசி.

    ரூபாய் மதிப்பு:


    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.16 புள்ளிகள் உயர்ந்து 69.74 ரூபாயாகவும் உள்ளது.

    கச்சா எண்ணெய்:


    சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.86 சதவீதம் குறைந்து 66.87 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 3.92 சதவீதம் குறைந்து 56.59 டாலர் எனவும் விற்பனையாகி வருகிறது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Nifty, Sensex, Stock market

    அடுத்த செய்தி