2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி ரிட்டன் செலுத்தும் கடைசி தேதி 31 ஜூலை. இன்னும் நான் ITR சமர்ப்பிக்கவில்லை, கணக்கரை பார்த்து எப்போது பதிவு செய்வது என்று கவலை படாதீர்கள். நீங்களே உங்கள் ITR 1 படிவத்தை சமர்ப்பிக்கும் வழிகளை சொல்கிறோம்.
வரி முறை: 2020-21 நிதியாண்டில் இருந்து (AY 2022-23) புதிய வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோர் வருமான வரி சட்டத்தின் 115BACயின் கீழ் எந்த வரி முறையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாரோ அதை தெரிவு செய்யலாம். சம்பளத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யும் போது முதலாளியிடம் சொல்லி அல்லது முன்கூட்டிய வரி செலுத்தும் போது வரி முறையை மாற்றலாம்.
யாருக்கு எந்த ITR படிவம்? உங்களுக்கு எந்த படிவம்? விவரங்கள் இதோ..
ஐடிஆர் தாக்கல் முறை
ஒரு வரி செலுத்துவோர் படிவம் ITR-1ஐ மின்னணு முறையில் அல்லது ஆஃப்லைன் முறையில் பதிவிடலாம்.
முன்பே நிரப்பப்பட்ட தகவல்
படிவம் ITR-1, முழுவதுமாக ஆன்லைனில் தாக்கல் செய்தால், தனிப்பட்ட விவரங்கள், சம்பள வருமானம், டிவிடென்ட் வருமானம், வட்டி வருமானம் போன்ற சில முன் நிரப்பப்பட்ட தகவல்களுடன் வரும்.
நீங்கள் பகுதி ஆன்லைன் மற்றும் பகுதி ஆஃப்லைன் முறையைப் பயன்படுத்தினால், புதிய வருமான வரி போர்ட்டலில் இருந்து பதிவிறக்கபட்டு முன் நிரப்பப்பட்ட JSON தரவை பயன்படுத்த வேண்டும்
படிவம் ITR-1 ஐ முழுமையான ஆன்லைன் முறையில் தாக்கல் செய்வதற்கான செயல்முறை
www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பான் எண்ணை உள்நுழைவதற்கான பயனர் ஐடியாக உள்ளிட்டு பாஸ்வோர்ட் போட்டு உள்நுழையவும்.
E-File > Income Tax Returns -> என்பதற்குச் சென்று, மெனுவில் இருந்து 'File Income Tax Return' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த பக்கத்தில் மதிப்பீட்டு ஆண்டு (AY 2022-23) என்பது தேர்ந்தெடுத்து , தாக்கல் செய்யும் முறை (ஆன்லைன்), பொருந்தக்கூடிய நிலை (எ.கா. தனிநபர்) மற்றும் ITR படிவம் (ITR-1) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, "தொடங்குவோம்" என்பதைக் கிளிக் செய்யவும்.
ITR 1 படிவத்தின் தன்மைகளில் எது உங்களுக்கு பொருந்தும் என்பதைச் சொடுக்கி CONTINUE கொடுங்கள்.உள்ளே 5 டேப்கள் வரும்.
முதலில் தனிப்பட்ட தகவல் தாவல்:
வரி செலுத்துபவரின் சுயவிவரம் (பெயர், முகவரி, பான், ஆதார் எண், பிறந்த தேதி), தொடர்பு விவரங்கள் (மொபைல் எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி), வேலையின் தன்மை, தாக்கல் செய்யும் பிரிவு மற்றும் வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் வரி செலுத்துபவரின் மின்-தாக்கல் கணக்கிலிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளிடப்பட்டிருக்கும். அவற்றை முதலில் சரிபார்த்து உத்தரவு தர வேண்டும்.
பல கணக்குகள் சேர்க்கப்பட்டிருந்தால் வரி திரும்ப பெறும்போது எந்த கணக்கிற்கு வர வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அடுத்த பக்கத்தில் வருமானம் குறித்த கேள்விகள் இருக்கும். சம்பளம், ஓய்வூதியம், வீட்டு வாடகை, இட வருமானம், விவசாய வருமானம் முதலியவற்றில் இருந்து பெரும் வருமானத்தை அந்தந்த நிலைகளில் உள்ளிட்ட வேண்டும். சம்பளம், ஓய்வூதியம் பெரும் நிறுவன ஊழியர்களுக்கு அவர்களது நிறுவன தரவுகள் படிவம் 16படி ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். அதைத்தவிர்த்து வரும் தொகையை உள்ளிட்ட வேண்டும். அதை சமர்பித்தவுடன் அடுத்த நிரல் வரும்.
பகுதி VI-A இந்த கீழ் வரும் மொத்த விலக்குகள்:
பிரிவு 80C இன் கீழ் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு பிரீமியம், பிரிவு 80D இன் கீழ் மருத்துவ காப்பீட்டு பிரீமியம். 80G- அரசு, தொண்டு நிறுவனம்,அரசியல் கட்சிகளுக்கு கொடுத்த நன்கொடைகள், 80GG- வீட்டு வாடகை, 80TTA- வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி முதலியவற்றை உள்ளிட்டு மொத்த வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த விவரங்கள் படிவம் 16ல் இருந்து தானாக நிரப்பப்படும். படிவம் 16 இல் ஏதேனும் தவறிவிட்டால், ஐடிஆர் தாக்கல் செய்யும் போது நீங்கள் அதை சேர்க்கலாம். எல்லாவற்றையும் சரிபார்த்து சமர்ப்பித்தால் அடுத்த கட்டத்திற்கு நகரும்.
அடுத்தது வரி செலுத்தப்பட்டது: இதில் படிவம் 26AS/AIS இலிருந்து டிடிஎஸ், டிசிஎஸ், முன்கூட்டிய வரி மற்றும் சுய மதிப்பீட்டு வரி (எஸ்ஏடி) என்று இதுவரை வரி செலுத்தப்பட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
மொத்த வரிப் பொறுப்பு: இந்த பக்கத்தில் மொத்த வருமானம், செலுத்தப்பட்ட வரிகள், செலுத்த வேண்டிய வட்டி, தாமதக் கட்டணம் (ஏதேனும் இருந்தால்) ஆகியவற்றைக் காட்டும். வரி ஏதும் திரும்ப பெறவேண்டி இருந்தால் அதன் விவரங்களையும் காட்டும். உறுதி என்பதைக் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.
சுருக்கம்: இது அனைத்து தகவல்களின் சுருக்கம் மற்றும் வரி செலுத்துவோர் அனைத்து பக்கங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டதை உறுதிசெய்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.
எல்லாவற்றையும் சரி பார்த்த பின்னர் உறுதிமொழி பக்கம் வரும். அதையும் சரிபார்த்து வரைவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின் அதை இறுதியாக சமர்ப்பித்து விடலாம்.
வருமானம் தாக்கல் செய்யப்பட்டவுடன், வரி செலுத்துபவருக்கு வரித் துறையால் ஒரு எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் தகவல் அனுப்பப்படும். வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, ஒப்புகை (ITR-V) வரி செலுத்துவோரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, வரி செலுத்துவோர் நெட் பேங்கிங், ஆதார் OTP போன்றவற்றின் மூலம் மின்னணு முறையில் உடனடியாக வரிக் கணக்கைச் சரிபார்க்கலாம் அல்லது ITR இன் பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கையொப்பமிட்டு 120 நாட்களுக்குள் அனுப்பலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Income tax, Personal Finance