ஹோம் /நியூஸ் /வணிகம் /

QR code பயன்படுத்தி ATM-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி.? முழு விவரம்.!

QR code பயன்படுத்தி ATM-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி.? முழு விவரம்.!

ATM

ATM

UPI Cardless Money Withdraw | பேமென்ட் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க உதவும் வழிகளை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிஜிட்டல் உலகில் இன்டர்நெட் பேங்கிங் துவங்கி தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் UPI வரை நாம் நிதி பரிவர்த்தனைகளை கையாளும் முறைகள் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. கையில் காசு இல்லாவிட்டாலும் கூட மொபைலில் இருக்கும் பேமென்ட்ஸ் ஆப்ஸ்களை நம்பி தெருவோரம் விற்கும் பானி பூரி சாப்பிடுவது முதல் ஷாப்பிங் மாலில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது வரை UPI பலருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது.

ஒருவேளை உங்களுக்கு அவசரமாக ரொக்க பணம் தேவைப்படுகிறது ஆனால் உங்கள் கையில் ATM கார்டு இல்லை என்றாலும் கூட UPI உதவும் என்பது மிகப்பெரிய வரம் அல்லவா? ஆம், கையில் பணமில்லை என்றாலும் பேமண்ட் செய்ய உதவும் UPI, கையில் உங்களுக்கு பணமாக தேவை என்றால் அதற்கும் உதவும். இந்த அம்சத்திற்கு Interoperable cardless cash withdrawal (ICCW) என்று பெயர். ATM கார்டுகள் இல்லாவிட்டாலும் கூட ATM சென்டருக்கு சென்று பணமெடுக்க உதவும் ICCW அம்சத்தை வழங்க நாட்டின் அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வருகிறது.

இதற்கு காரணம் க்ளோனிங், ஸ்கிம்மிங் போன்ற கார்டு மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பிக்க இந்த அம்சம் பெரிதும் உதவும். எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பிஎன்பி உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி வங்கிகளின் ஏடிஎம் சென்டர்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம், அமேசான் பே போன்ற எந்தவொரு UPI பேமென்ட் சர்விஸ் ப்ரொவைடர் ஆப் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுத்து கொள்ளலாம்.

யூஸர்களின் கையில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாத நிலையில் பணத்தை எடுக்க உதவும். வெளியில் செல்லும் போது அவசரத்தில் கையில் பணம் மற்றும் கார்டுகளை எடுத்து செல்ல மறக்கும் போது அல்லது கார்டுகளை மிஸ் செய்து விட்ட சூழலில் உள்ளவர்களுக்கு ஒரு டென்ஷன் இல்லா அனுபவத்தை இந்த ICCW அம்சம் தரும். இந்த அம்சத்தை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான வரம்பு தற்போது ரூ.5000-ஆக உள்ளது. ஏடிஎம்களில் இருந்து UPI மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காது. பேமென்ட் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க உதவும் வழிகளை இங்கே பார்க்கலாம்.

Also Read : சிங்கப்பூரின் PayNow உடன் இணையும் இந்தியாவின் UPI

UPI-ஐ பயன்படுத்தி ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பதற்கான படிப்படியான வழிமுறைகள்:

- முதலில் உங்களுக்கு இருக்கும் ATM சென்டர்களுக்கு சென்று அங்கிருக்கும் மெஷினின் ஸ்கிரீனில் கட்டப்படும் ஆப்ஷன்களில் இருந்து Withdraw Cash-ஐ செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.

- பின் ATM மெஷின் டிஸ்ப்ளேவில் காட்டப்படும் UPI ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளவும்.

- இதன் பிறகு குறிப்பிட்ட ATM ஸ்கிரீனில் ஒரு QR code காட்டப்படும்.

- இப்போது உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள UPI அடிப்படையிலான ஆப்ஸில் ஒன்றை தேர்வு செய்து QR code-ஐ ஸ்கேன் செய்யும் ஆப்ஷனை பயன்படுத்தவும்.

- QR code-ஐ ஸ்கேன் செய்தவுடன் ரூ.5,000 வரம்பிற்குள் உங்களுக்கு தேவைப்படும் தொகையை என்டர் செய்யவும்.

- பின் உங்கள் UPI பின்னை என்டர் செய்து Proceed பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது குறிப்பிட்ட மெஷினில் இருந்து நீங்கள் என்டர் செய்த பணத்தை எடுத்து கொள்ளலாம்.

Published by:Selvi M
First published:

Tags: ATM services, Tamil News, UPI, Withdraw