Home /News /business /

state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!

state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!

ஸ்டேட் பேங்க்

ஸ்டேட் பேங்க்

state bank super savings : .டெபாசிட் செய்யப்பட்ட அடுத்த மாதத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு தேதியில் ஆன்யூட்டி வழங்கப்படும்

    ஸ்டேட் பேங்கில் இருக்கும் வருடாந்திர வைப்புத் திட்டம் (Annuity Scheme) குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் உதவும்.

    மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்கில் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள், முதலீடு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த வருடாந்திர வைப்புத் திட்டம் . மிடில் கிளாஸ் மக்களுக்கு பெருமளவில் கைக்கொடுக்கும் திட்டமான இதை குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதே போல் மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும்.இதில் கிடைக்கும் மற்றொரு சலுகை ஆன்யூட்டியின் மீதித் தொகையில் 75% வரை ஓவர் டிராஃப்ட் கடனைப் பெற முடியும்.

    இதையும் படிங்க.. உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

    இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின், அனைத்து கிளைகளிலிருந்தும் இந்த வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம்.குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.டெபாசிட் செய்யப்பட்ட அடுத்த மாதத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு தேதியில் ஆன்யூட்டி வழங்கப்படும் TDS கழித்த பிறகு சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கில் வட்டியானது செலுத்தப்படும். நல்ல வருமானம், உறுதியான வட்டி கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.

    இதன் திட்டக்காலம், 36, 60, 84 மற்றும் 120 மாதங்கள். இதில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதம் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்துக்கான டெபாசிட்டுகளுக்கு சமமாக கிடைக்கும்; இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வருமானம் தொடங்குகிறது.நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை திரும்பப் பெறுவீர்கள்.

    இதையும் பரிங்க.. கம்மியான வட்டியில் எந்த வங்கியில் நகைக் கடன் கிடைக்கும்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

    இதுக்குறித்த கூடுதல் விவரங்களை பெற விரும்பினால் அருகில் இருக்கும் எஸ்பிஐ வங்கிக்கு சென்று விசாரிக்கலாம் அல்லது எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளத்தில் சென்றும் செக் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Savings, SBI, STATE BANK, State Bank of India

    அடுத்த செய்தி