• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிக்சட் டெபாசிட் திட்டத்தின் மீது நீங்கள் 5 நிமிடத்தில் கடன் வாங்கலாம் தெரியுமா?

பிக்சட் டெபாசிட் திட்டத்தின் மீது நீங்கள் 5 நிமிடத்தில் கடன் வாங்கலாம் தெரியுமா?

5 நிமிடத்தில் கடன்

5 நிமிடத்தில் கடன்

எஸ்பிஐ யோனோ ஆப் வழியாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். 5 நிமிடத்தில் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும்.

  • Share this:
    எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டம் மூலம் 5 நிமிடத்தில் எப்படி கடன் வாங்கலாம் என்ற தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அசத்தலான பல சேவைகள் உள்ளன். அதுக்குறித்து தெரிந்து கொள்ளாத பலரும் நம்மில் உள்ளனர். இதுப்போன்ற தகவல்கள் இந்த சமயத்தில் உதவில்லை என்றாலும் அவசர காலத்தில் நமக்கே தெரியாமல் கண்டிப்பாக இதுப்போன்ற வசதிகள் நமக்கு கைக்கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக திடீரென்று நமக்கு பணம் தேவை ஏற்படும் எங்கு கேட்டாலும் கிடைக்காது. குறைந்த தொகை என்பதால் லோன் எடுக்க மனசும் வராது. இந்த சமயத்தில் தான் வட்டிக்கு வாங்கி சிக்கி கொள்வோம். ஆனால் இனிமே இதுப்போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    ஓவர் டிராஃப்ட் வசதியை பயன்படுத்தி முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி எஸ்பிஐ வங்கியில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் நீங்கள் அவசரக் காலத்தில் குறைந்த வட்டில் பணம் எடுக்கலாம். இதற்கு வங்கியே ஒரு குறைந்த வட்டியை உங்களுக்கு தீர்மானிக்கும். எஸ்பிஐ யோனோ ஆப் வழியாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். 5 நிமிடத்தில் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதற்கு நீங்க செய்ய வேண்டியது இதுதான். எஸ்பிஐயில் ஏதாவது ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கி பணத்தை சேமிக்க வேண்டும் இப்போது நீங்கள் ரூ. 10000 எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 ஆண்டு கால வரம்பில் போட்டு உள்ளீர்கள் என்றால் உங்களால் அந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இருந்து ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் ரு. 9000 முன்கூட்டியே எடுக்கலாம். இந்த தொகைக்கு எஸ்பிஐ வட்டி விதிக்கும். இந்த முறையில் லோன் எடுக்க நீங்கள் ஓவர் டிராஃப்ட் வசதியை செயல்படுத்தி இருந்தாலே போதும். இதுவரை அதை செயல்படுத்தாதவர்கள் யோனோ ஆப்ஸ் மூலம் உடனே செய்துவிடுங்கள். நீங்கள் சேமிக்கு பணம் மூலமே அவசரம் என்றால் நீங்கள் கடன் பெறலாம்.



    கூடுதல் விவரங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு வங்கி நிர்வாகத்தை அணுகவும். அல்லது ஆன்லைனிலும் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: