Home /News /business /

ஒருவேளை எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருந்தா இத்தனை சலுகைகளையும் நீங்கள் பெறலாம்!

ஒருவேளை எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருந்தா இத்தனை சலுகைகளையும் நீங்கள் பெறலாம்!

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

பண்டிகை காலம் முடியும் வரை இந்த திட்டங்கள், சலுகைகள் அனைத்துமே செயல்பாட்டில் இருக்கும்

    உங்களுக்கு எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருந்தால் பண்டிகை காலம் முடியும் வரை நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான் தெரியுமா?

    பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை கவர பல முன்னணி வங்கிகள் போட்டிப்போட்டு கொண்டு ஆஃபர்களை வாரி வழங்குவது, சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பே எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிரடியான பல சலுகைகளை வழங்கி வருகிறது. பண்டிகை காலம் முடியும் வரை இந்த திட்டங்கள், சலுகைகள் அனைத்துமே செயல்பாட்டில் இருக்கும். தேவை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

    முதலில் என்னென்ன சலுகைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.கார் கடன், நகைக் கடன் மற்றும் தனிநபர் கடன்களில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஹோம் லோனில் பல அதிரடி ஆஃபர்க:ளும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ரூ. 75 லட்சதுக்கு மேல் வீட்டு கடன் வாங்கினாலும் 6.70 சதவீத வட்டி செலுத்தினால் போதும்.சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என எஸ்பிஐ அண்மையில் அறிவித்தது. அதாவது ஹோம் லோனுக்கான வட்டி விகிதம் 6.7% நிர்ணியிக்கப்பட்டு செயலாக்க கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மாத சம்பளம் இல்லாதோருக்கு 0.15 சதவீதம் அதிகமான வட்டியில் அதாவது 6.85 சதவீத வட்டியில் ஹோம் லோன் அளிக்கப்படுகிறது.இதை போலவே, தங்க நகை கடனை வெறும் 7.5 சதவீத வட்டியில் அளிக்கிறது.கூடுதல் விவரங்களுக்கு sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

    எஸ்பிஐ வங்கியில் தற்போது அனைத்து கடன்களையும் ஆன்லைன் தளத்திலேயே விண்ணப்பிக்கும் சேவையும் கொண்டு வரப்பட்டு உள்ளது. எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்க https://sbiyono.sbi/index.html என்ற இணையத் தளத்தில் பதிவு செய்தாலே போதும் வங்கி உங்களை அணுகும். அதே போல் யோனோ செயலிலும் லோனுக்கு விண்ணப்பிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி