Home /News /business /

SBI தரும் அருமையான வாய்ப்பு.. 24 மணி நேரம் கடன் கிடைக்குமாம்!

SBI தரும் அருமையான வாய்ப்பு.. 24 மணி நேரம் கடன் கிடைக்குமாம்!

எஸ்பிஐ

எஸ்பிஐ

SBI கடன் வசதி 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவசர நேரத்தில் எப்போது வேண்டுமென்றாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியினான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் 24மணி நேரமும் கடன் பெறு வசதி இருக்கிறது உங்களுக்கு தெரியுமா?

    எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி கடன் தேவை என்றாலும், பர்சனல் லோன் வேண்டுமென்றாலும் லோன் தேடி இனி வங்கிக்கு சென்று அலைய வேண்டாம். வாடிக்கையாளர்கள் ஈஸியாக எஸ்பிஐ-யின் முன் அங்கீகரிக்கப்பட்ட தனி நபர் கடனை எளிமையாக வீட்டில் இருந்தப்படியே பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐயின் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த கடனை பெற முடியும். யோனா ஆப் மூலம் டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதற்கான செயல்பாடு மிகவும் எளிமையானது. எஸ்பிஐயின் இந்த புதிய வசதி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    எஸ்பிஐ வங்கியின் யோனா ஆப்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனிமேல் முன் அங்கீகரிக்கப்பட்ட தனி நபர் கடனையும் இதில் பெறலாம். இந்த கடன் வசதி 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வாடிக்கையாளர்கள் அவசர நேரத்தில் எப்போது வேண்டுமென்றாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கி நேரத்தில் தான் இது செயல்படும் என எண்ண வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

    எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL வங்கியின் 4 இலக்க கடைசி நம்பரை டைப் செய்து எஸ்.எம்.எஸ் செய்தாலே போதும் நீங்கள் நீங்கள் கடனை பெற தகுதியானவர்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதை உறுதி செய்த பின்பு ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான செய்ல்பாட்டு கட்டணம் ஜனவரி 31, 2022 வரையில், முழுமையாக 100% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டணங்கள் விதிக்கப்படலாம். எனவே வாடிக்கையாளர்ள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். இந்த கடனுக்குக்கான வட்டி 9.60%ல் இருந்து தொடங்குகிறது.

    எப்படி விண்ணப்பிப்பது?

    யோனோ ஆப்பினுள் நுழைந்து அதில் மெனு பாரில் Avail Now என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

    அதில் கடன் தொகை எவ்வளவு, கால அவகாசம் எவ்வளவு என்பதை தேர்தெடுக்கவும்.

    பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு கடன் தொகை உடனே கிரெட்டி செய்யப்பட்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: SBI, SBI Bank, STATE BANK

    அடுத்த செய்தி