ஹோம் /நியூஸ் /வணிகம் /

STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!

STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!

ஸ்டேட் பேங்க்

ஸ்டேட் பேங்க்

STATE BANK sbi : வங்கி லோன் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட். கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிர்ணயிக்க பயன்படும் MCLR விகிதத்தினை எஸ்பிஐ வங்கி 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் ஹோம் லோன், கார் லோன் எடுத்தவர்கள் முக்கியமாக இந்த தகவலை தெரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் கடனுக்கான மாத தவணை ( emi) அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.காரணம், MCLR எனப்படும் கடன்களுக்கான விகிதத்தை எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன் மற்றும் புதிய கடன்களுக்கும் வட்டி விகிதம் மாறுப்படும். இதனால் மாதத்தவணை தொகையும் அதிகரிக்கலாம். எஸ்பிஐ வங்கி, ஒரு மாதம் மற்றும் மூன்று மாத தவணைகளுக்கும் MCLR விகிதத்தை 6.65%ல் இருந்து 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.. PPF account : அதிக வட்டி கிடைக்க இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க போதும்!

அதே போல், 6 மாதங்களுக்கான MCLR விகிதம் 6.95 சதவீதத்தில் இருந்து, 7.05 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 ஆண்டுக்கான MCLR வட்டி விகிதம் 7ல் இருந்து 7.10 சதவீதமாகவும் மற்றும் 2 வருடத்திற்கு MCLR வட்டி விகிதம் 7.20 சதவீதத்தில் இருந்து, 7.30 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் எஸ்பிஐ வங்கி 3 ஆண்டுகளுக்கான MCLR வட்டி விகிதத்தை 7.30 சதவீதத்தில் இருந்து, 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

10%க்கு குறைவான வட்டி.. டூவீலர் லோன் எடுக்கும் ஐடியா இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம்!

சமீபத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் MCLR விகிதத்தை மாற்றி அறிவித்து இருந்தது. 0.05 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார் லோன், ஹோம் லோன் போன்ற பல்வேறு வகையான லோன் எடுத்துள்ள வாடிக்கையாளர்கள் இதனால் மாத தவணை விகிதம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி லோன் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம் அல்லது எஸ்பிஐ ஆன்லைன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பார்க்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: SBI, SBI Loan, State Bank of India