ஹோம் /நியூஸ் /வணிகம் /

State bank: எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பை தொடங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா?

State bank: எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பை தொடங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா?

எஸ்பிஐ

எஸ்பிஐ

State bank : எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் மற்றவர்களுக்கு பழைய வட்டி முறையே தொடரும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் சேமிப்பை தொடங்கியவர்களுக்கு வங்கி நிர்வாகம் ஒரு குட் நியூஸை கூறியுள்ளது. என்னது அது? வாங்க பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி பலரும் நம்பி முதலீடு செய்யும் திட்டமாக இருந்து வருகிறது இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது.முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வெவ்வேறு வகையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. அந்த வகையில் இப்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைத்திருக்கும் குட் நியூஸ் பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் தொடங்க வேண்டுமா? உங்கள் கையில் இவ்வளவு தொகை இருந்தால் போதும்!

எஸ்பிஐ வங்கி சமீபத்தில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 அடிப்படைப் புள்ளிகளை அதிகரித்துள்ளது. அதாவது 1 முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தை தொடர்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனிமேல் 5.10% வட்டியை பெறுவார்கள். இதற்கு முன்பு அவர்களுக்கு 5.% வட்டி வழங்கப்பட்டு வந்தது. அதே போல் மூத்த குடிமக்களின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் 5.5%-5.6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. LIC : புது வருஷத்தில் ஒரு நல்ல சேமிப்பை தொடங்க வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசி பற்றி யோசிக்கலாமே!

இந்த வட்டி நடைமுறை ஜனவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது கூடுதல் தகவல். இவர்களை தவிர எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் மற்றவர்களுக்கு பழைய வட்டி முறையே தொடரும் என்பதை கவனத்தில் கொள்ளவும். 5 முதல் 10 ஆண்டுகள் வரை பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி 5.4%.  ஆகும். சமீபத்தில் பிரபல வங்கியான கோடாக் மகிந்த்ரா மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியில் மாற்றத்தை கொண்டு வந்தன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank, Savings, SBI