நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் செயல்பாட்டில் இருக்கும் ஒரு சூப்பரான முதலீடு திட்டம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். குறிப்பாக முதலீட்டாளர்களுக்கு இந்த தகவல் பெரிதும் பயன்படும்.
நிலையான வைப்பு நிதி எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி பலரும் நம்பி முதலீடு செய்யும் திட்டமாக இருந்து வருகிறது . அதற்கு என்ன காரணம் என்றால் அதில் பணத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதிர்வு காலத்தில் பணம் திருப்பி தரப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி பேங்க் மற்றும் நிதி நிறுவனங்களில் தொடரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வரிச் சலுகையும் கிடைக்கிறது. அந்த வகையில்
எஸ்பிஐ வங்கியில் வரிச் சலுகையுடன் கிடைக்கும் சூப்பரான சேமிப்பு திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம்.
இதையும் படிங்க... அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.8 லட்சம் வரை தர்றோம்.. அறிவிப்பு வெளியிட்ட பிரபல வங்கி!
SBI Tax Savings Scheme, 2006 எனப்படும் இத்திட்டத்தில் இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்துட்டத்துக்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது. அதே போல் இந்த திட்டத்தில் கூட்டு கணக்கு தொடங்கி சேமிக்கவும் எஸ்பிஐ வாய்ப்பு வழங்குகிறது. அதே போல் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர பான் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க.. epfo : உங்கள் குடும்பத்திற்கு ரூ. 7லட்சம் வரை கிடைக்கும்.. பிஎஃப் கணக்கில் இதை செய்தால் மட்டும் போதும்!
விதிமுறைகள் :
இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகள். அதனால் அதற்கு முன் கணக்கை திரும்பப் பெற முடியாது. 5 வருட லாக்-இன் காலத்தில் கடன் வசதி கிடைக்காது. எஸ்பிஐயின் இந்த சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 6.3 சதவீதம் வட்டி அளிக்கப்படுகின்றன. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் தனிநபர்கள் ரூ. 1.5 லட்சம் வரை வரிவிலக்கில் நிதியை பெறலாம். இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த திட்டத்தில் இணைய எஸ்பிஐ ஆன்லைன் ஆப்பை பயன்படுத்தவும். மேலும் விவரங்களுக்கு எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.