ஹோம் /நியூஸ் /வணிகம் /

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அந்த 2 அறிவிப்புகள்.. முழு விவரம்!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அந்த 2 அறிவிப்புகள்.. முழு விவரம்!

எஸ்பிஐ

எஸ்பிஐ

ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக ஆன்லனில் அனுப்பலாம் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எஸ்பிஐ என அழைப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் 2 புதிய சூப்பரான அறிவிப்புகளை வெளியிட்டது. அதுக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதுவரை இது பற்றி தெரிந்து கொள்ளாதவர்களும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் சேவையில் எஸ்பிஐ வங்கி எப்போதுமே தனி கவனத்துடன் செயல்படும். அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களை அலெர்ட் செய்வதில் தொடங்கி வட்டியில் மாற்றம், யோனோ செயலியில் சில வசதிகளை அறிமுகப்படுத்துதல் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அவ்வப்போது சில அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும். அந்த வகையில் எஸ்பிஐ வங்கி சமீபத்தில் 2 சூப்பரான அப்டேட்டுக்களை அறிவித்திருந்தது. இதுக் குறித்து இப்போது பார்க்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. எஸ்பிஐ வங்கியில் ஐஎம்பிஎஸ் imps) எனப்படும் உடனடி பரிவர்த்தனையின் மூலம் மின்னணு முறையில் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சேவைக்கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்னணு முறையில் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக ஆன்லனில் அனுப்பலாம் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க.. sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய நம்பர்!

வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பேங்கிங், யோனோ செயலி உள்ளிட்டவை மூலம் ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.அதே போல் வங்கிக் கிளைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது ரூ.5 லட்சம் வரை ரூ.20 சேவைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் என்இஎஃப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலும், ஆர்டிஜிஎஸ் முறையில் ரூ.5 லட்சம் வரையிலும் மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸ் பேங்கில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

அதே போல், எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வீகேர் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு இன்னும் கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: SBI, State Bank of India