ரூ. 5 லட்சம் வரை நிபந்தனை இல்லா கடன்.. இந்த வங்கியில் மட்டும் தான் கிடைக்கும்!

ரூ. 5 லட்சம் லோன்

கடன் பெற வாடிக்கையாளர்கள் சொத்து ஆவணங்களையும் டெபாசிட் செய்ய வேண்டாம்.

 • Share this:
  எஸ்பிஐ வங்கியில் இருக்கும் கவச் பர்சனல் லோன் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதில் ஏகப்பட்ட சலுகைகளும் உண்டு.

  கொரோனா துயர் காலத்தில் வங்கிகள் பல, பலவிதமான லோன்களை அறிமுகப்படுத்தின. அதாவது, ஈஸியாக லோன் வாங்கும் முறை, வீட்டில் இருந்தப்படியே லோன் பெறுவது, 6 மாதத்திற்கு பிறகு இஎம்ஐ கட்டும் வசதியுடை லோன் என பல வகையான லோன்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகமாகின. அந்த வரிசையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கிக் கொள்ளும் கவச் லோன் என்ற பர்சனல் லோனை அறிமுக செய்தது.இந்த  கவச் தனிநபர் கடனின் நோக்கமே வாடிக்கையாளர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் செலவுகளிலிருந்து நிவாரணம் வழங்குவது என்பது கூடுதல் சிறப்பு. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த கடனுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம்.

  இந்த லோனைப் பெற சம்பளதாரர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் விண்ணப்பிக்கலாம் . ஏற்கெனவே எஸ்.பி.ஐ வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருப்பவர்களும், இந்தக் கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் தான். ஓய்வூதியதாரர்களும் இந்த கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐயில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லோன் திட்டத்தில் கடன் பெற வாடிக்கையாளர்கள் சொத்து ஆவணங்களையும் டெபாசிட் செய்ய வேண்டாம்.

  தனி நபர் அல்லது அவர்களின் குடும்பத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும். அதே நேரத்தில், குறைந்தபட்ச கடன் 25 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கான வட்டி விகிதமாக எஸ்பிஐ 8.5% என நிர்ணியித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எஸ்பிஐயில் இந்த கடனை பெறுவது மிகவும் சுலபம். அதுமட்டுமில்லை, பல சலுகைகளும் இதில் வழங்கப்படுகிறது. கொரோனா போன்ற மருத்துவ செலவுக்காக வழங்கப்படும் இந்த கடனில் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ-யை நினைத்து கவலை கொள்ளவும் வேண்டாம். ஏனெனில் கடன் வாங்கி மூன்று மாதங்கள் கடன் காலம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாதங்களுக்குகடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்பிஐ யில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த கடனை பெறலாம்.

  கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் சென்று பார்க்கவும். எஸ்பிஐ அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கவச் லோன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: