கொரோனா காலத்தில் மக்கள் கடன் வாங்குவது அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேநேரம், மக்கள் செலவு செய்யும் அளவு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில், கொரோனா பரவல் காலத்தில், பொருட்களின் விலை அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, நிலையில்லா வருமானம், வேலை வாய்ப்பு நிச்சயமின்மை போன்றவை மக்களை செலவு செய்ய விடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா கால மருத்துவ செலவுகள் மக்கள் மத்தியில் ஓர் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கி உள்ளதாகவும், ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதால், மக்கள் ஆன்லைனில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட சுமார் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட்
வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது, வங்கியில் மக்கள் செய்திருந்த டெபாசிட்டை திரும்பப் பெறும் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்ததாகவும், மக்களின் சேமிப்பு 8.2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... Reliance Just Dial Deal : ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 66% பங்குகளை வாங்குகிறது ரிலையன்ஸ்
அதோடு, மக்களிடம் கடன் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது மக்களின் சேமிப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு குறைந்ததற்கு பெட்ரோல் விலை உயர்வு, கொரோனா காலத்தில் ஏற்பட்ட வேலை இழப்பு, விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் வாங்கிய நகைக்கடன் என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அண்மையில், மணப்புரம் நிதி நிறுவனம், நகை கடன் வாங்கி, பணத்தை திரும்ப செலுத்தாதவர்களின் தங்க நகைகளை ஏலத்தில் விட்டது. அப்போது, சுமார் ஆயிரம் கிலோ தங்கம், சுமார் 404 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது. அந்த அளவிற்கு மக்கள் கடனில் சிக்கி தவிக்கின்றனர் என்பதை பாரத ஸ்டேட்
வங்கியின் அறிக்கையும் தெரிவிக்கிறது. இது சாமானிய மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு, கையில் இருக்கும் நகை மூலம் பெறும் கடன் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் பெறும் கடன்களின் நிலை மட்டுமே. இனி வரும் காலங்களில் தான், தொழில் துறை நிறுவனங்கள், வாங்கிய கடன்களின் தாக்கம் குறித்த நிலை வெளியாகும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.