• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி குறைத்தது!

குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி குறைத்தது!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கடன் வட்டி விகித குறைப்புகள் அமல்

  • Share this:
    வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி 5.15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதாவது 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதே போன்று வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இந்நிலையில் இந்தியாவின் பெரிய வங்கியான எஸ்பிஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது குறைத்துள்ளது. அதாவது வீட்டுக்கடன் உள்பட அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடன் வட்டி விகிதம் 7.80 சதவீதத்தில் இருந்தது 7.05 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல எஸ்பிஐயின் ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி நிர்ணயிக்கும் திட்டத்தில் 7.40 சதவீதத்தில் இருந்து 6.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி 30 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கான வட்டி 7.20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான மாதாந்திர தவணை 24,999 ரூபாயில் இருந்து 23,620 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த கடன் வட்டி விகித குறைப்புகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see... 





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: