Home /News /business /

State Bank வழங்கும் அட்டகாசமான பிக்சட் டெபாசிட் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் தான்!

State Bank வழங்கும் அட்டகாசமான பிக்சட் டெபாசிட் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் தான்!

ஸ்டேட் பாங்க்

ஸ்டேட் பாங்க்

State Bank fixed deposit: SBI வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் என்பது உள்நாட்டில் செயல்படுத்தப்படும் டெர்ம் டெபாசிட் திட்டம் என்பதால், இதில் வெளிநாடுவாழ் மூத்த குடிமக்கள் இணைய அனுமதி கிடையாது.

    SBI வங்கியில் விகேர் (WeCare) திட்டத்தின் கீழ் பிக்ஸட் டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் இணைய இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ விகேர் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான வட்டி வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று கால சூழலுக்கு மத்தியில், மூத்த குடிமக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு விகேர் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்தால் கூடுதலாக 80 பேசிஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு சதவீதம் என்பது 100 பேசிஸ் பாயிண்ட்கள் ஆகும். உதாரணத்திற்கு பொதுமக்கள் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்கையில் 5.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்றால், மூத்த குடிமக்கள் விகேர் திட்டத்தின் மூலம் முதலீடு செய்யும்போது அவர்களுக்கு 6.30 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    இதையும் படிங்க.. Uidai : போகும் இடமெல்லாம் எடுத்து செல்லலாம்.. இ-ஆதாரை டவுன்லோடு செய்வது ரொம்ப ஈஸி!

    மூத்த குடிமக்களுக்கான விகேர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் (2022ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட்டது)

    7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.40 சதவீதம்
    46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.40 சதவீதம்
    180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.90 சதவீதம்
    211 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையில் - 4.90 சதவீதம்
    1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையில் - 5.60 சதவீதம்
    2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையில் - 5.70 சதவீதம்
    3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையில் - 5.95 சதவீதம்
    5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையில் - 6.30 சதவீதம்

    இதையும் படிங்க.. திருமணமானவர்கள் கவனத்திற்கு..புதிய உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க இதையெல்லாம் செய்ய வேண்டும்!

    திட்டத்தில் சேருவதற்கான தகுதி

    இந்தியாவில் வசிக்கும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேருவதற்கு தகுதியானவர்கள் என்று எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் என்பது உள்நாட்டில் செயல்படுத்தப்படும் டெர்ம் டெபாசிட் திட்டம் என்பதால், இதில் வெளிநாடுவாழ் மூத்த குடிமக்கள் இணைய அனுமதி கிடையாது.
    கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு அனைத்து வங்கிகளிலும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் முந்தைய திட்டத்தை காட்டிலும் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: SBI, STATE BANK

    அடுத்த செய்தி