எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம்ம குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டேட் வங்கி, பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி இந்த புதிய முடிவை கையில் எடுத்துள்ளது.
நிலையான வைப்புத்தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக உள்ளது. காரணம் பணத்திற்கு முழு பாதுகாப்பு தொடங்கி குறுகிய கால சேமிப்பு மற்றும் வரிச்சலுகை. இவை இரண்டுமே கிடைப்பதால் தயக்கம் இன்றி பலரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். வெறும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் மட்டுமில்லை நிதி நிறுவனங்களிலும் அவர்கள் முதலீடு செய்ய தவறுவதில்லை. வங்கிகளைக் காட்டிலும் சில நிதி நிறுவனங்கள அதிக வட்டி வழங்குவதால் மக்களின் பார்வை அந்த பக்கம் செல்கிறது. அதே நேரம் உங்கள் பணத்திற்கான பாதுகாப்பை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்து கொள்ள மறவாதீர்கள்.
SBI விடுத்த எச்சரிக்கை.. மொபைலுக்கு இப்படி மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருங்கள்!
சமீபத்தில் தனியார் வங்கிகள் அடுத்தடுத்து பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரித்து இருந்தன. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா கூறுகையில், “புதிய பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொறுத்த வரையில், அவை புதிய வட்டி விகிதங்களின்படி இருக்கும். சில முதிர்வுகளுக்கு ஏற்கனவே வட்டி விதிதம் அதிகரிப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக அறிவித்தது. இதனால் கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும் என கூறப்பட்டது.
ரிட்டயர்மென்ட் காலத்துக்கு பிறகு ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா? இதை செய்யுங்கள்!
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரிக்கவுள்ளதாக கூறி இருக்கும் தகவல் வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான எஃப்டி திட்டங்களுக்கு தற்போது 5.10 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். 3 முதல் 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கு புதிய எஃப்டிகளைத் திறந்தால், எஃப்டி மீதான வட்டி விகிதம் 5.45 சதவீதமாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fixed Deposit, SBI, STATE BANK, State Bank of India