முகப்பு /செய்தி /வணிகம் / State Bank வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க.. அடுத்த மாதம் முதல் வர போகிறது அதிரடி மாற்றம்!

State Bank வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க.. அடுத்த மாதம் முதல் வர போகிறது அதிரடி மாற்றம்!

எஸ்பிஐ

எஸ்பிஐ

State Bank : அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது

  • Last Updated :

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நிறைய வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் செயலி, வங்கி கிளைகள், ஏடிஎம், எஸ்எம்எஸ்,ஐபிஆர்எஸ் ஆகிய ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்த தனது வாடிக்கையாளர்களை ஊக்குவித்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ் (IMPS Instant Payment Service) எனப்படும் உடனடி பணப்பறிவர்த்தனை மூலமாக இனி 5 லட்சம் வரை அனுப்பலாம் என்றும், அதற்கு சேவை கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது. இதேபோல் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான அளவும் 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. canara bank : வட்டியில் மாற்றம்.. கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுப் பற்றி தெரியுமா?

IMPS, NEFT மற்றும் RTGS சேவையில் மாற்றம்:

அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது. எஸ்பிஐ அதன் ஐஎம்பிஎஸ் (உடனடி கட்டண சேவை) பரிவர்த்தனைகளுக்கான வரம்பை அதிகரித்துள்ளது. இதன்படி, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2 லட்சத்துக்குப் பதிலாக ரூ.5 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளைச் செய்யலாம் என வங்கி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க,.. இன்று பெண் குழந்தைகள் தினம்: அவர்களுக்காகவே செயல்படும் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆனால் இதே பணப்பரிவர்த்தனையை நீங்கள் வங்கிகள் மூலமாக நேரடியாக செய்யும் போது 20 ரூபாய் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் - ஆன்லைன்:

இன்டர்நெட் பேங்கிங், யோனோ செயலி உள்ளிட்டவை மூலம் ஐஎம்பிஎஸ் முறையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்தால் சேவை கட்டணம் கிடையாது.

எஸ்பிஐ ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் - ஆஃப் லைன்:

ஆயிரம் ரூபாய் வரை சேவை கட்டணம் கிடையாது

ரூ.1,000க்கு மேல் - ரூ.10,000 வரை: ரூ.2 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

ரூ.10,000க்கு மேல் - ரூ.1,00,000 வரை: ரூ.4 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

ரூ.1,00,000க்கு மேல் - ரூ.2,00,000 வரை: ரூ.12 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

ரூ. 2,00,000க்கு மேல் - ரூ. 5,00,000 வரை (புதிய அறிவிப்பின் படி): ரூ. 20 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

எஸ்பிஐ ஆன்லைன் NEFT சேவைக் கட்டணம்:

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலமாக என்இஎஃப்டி முறையில் ரூ.2 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள எவ்வித சேவைக்கட்டணமோ, ஜிஎஸ்டி வரியோ செலுத்த தேவையில்லை.

எஸ்பிஐ ஆஃப்லைன் NEFT சேவைக் கட்டணங்கள்:

ரூ.10,000 வரை: ரூ.2 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

ரூ.10,000க்கு மேல் - ரூ.1,00,000 வரை: ரூ.4 சேவைக் கட்டணம் + ஜி.எஸ்.டி.

ரூ 1,00,000/-க்கு மேல் - ரூ 2,00,000 வரை: ரூ. 12 சேவை கட்டணம் + ஜி.எஸ்.டி.

ரூ.2,00,000க்கு மேல்: ரூ.20 சேவைக் கட்டணம் + ஜி.எஸ்.டி.

எஸ்பிஐ ஆர்டிஜிஎஸ் ஆன்லைன் சேவை கட்டணம்:

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலமாக ஆர்டிஜிஎஸ் முறையில் ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள எவ்வித சேவைக்கட்டணமோ, ஜிஎஸ்டி வரியோ செலுத்த தேவையில்லை.

எஸ்பிஐ ஆர்டிஜிஎஸ் ஆஃப்லைன் சேவை கட்டணம்:

ரூ.2,00,000க்கு மேல் - ரூ.5,00,000 வரை: ரூ.20 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

ரூ.5,00,000க்கு மேல்: ரூ.40 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: SBI, State Bank of India