முகப்பு /செய்தி /வணிகம் / state bank alert : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த மெசேஜ் வந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க!

state bank alert : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த மெசேஜ் வந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க!

எஸ்பிஐ

எஸ்பிஐ

state bank alert : SBI வாடிக்கையாளர்கள் அவர்களின் SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு உள்ளது என்று வரும் மெசேஜில் எச்சரிக்கையாக மற்றும் கவனமாக இருக்குமாறு PIB அறிவுறுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

நீங்கள் SBI அக்கவுண்ட் ஹோல்டராக இருந்தால் மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விவரங்களை அவர்கள் திருட நேரிடலாம். ஏனென்றால் மோசடி செய்பவர்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைத் திருட பயன்படுத்தி வரும் புதிய மோசடி முறை குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அரசாங்க கொள்கைகள், திட்டங்கள், முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் பற்றிய தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு வழங்கும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB - Press Information Bureau), SBI யூஸர்கள் இந்த புதிய SMS மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்து உள்ளது.

SBI update : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!

SBI வாடிக்கையாளர்கள் அவர்களின் SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு உள்ளது என்று வரும் மெசேஜில் எச்சரிக்கையாக மற்றும் கவனமாக இருக்குமாறு PIB அறிவுறுத்தியுள்ளது. மோசடி செய்ய காத்திருக்கும் நபர்கள் இந்த அலெர்ட் டைப் மெசேஜ்களை SMS மூலம் அனுப்புவதாகக் கூறப்படுகிறது, மேலும் இதுபோன்ற மெசேஜ்கள் அல்லது கால்ஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தவிர இது போன்ற மெசஜ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் எவ்வித லிங்க்ஸ்களையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது.

இதையும் படிங்க.. savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

இது தொடர்பான ட்விட்டில் PIB கூறி இருப்பதாவது, உங்கள் SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக புழக்கத்தில் உள்ள ஒரு மெசேஜ் போலியானது (A message in circulation claiming that your @TheOfficialSBI account has been blocked is #FAKE) என்று கூறி உள்ளது. மேலும் அதே ட்விட்டில் உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை ஷேர் செய்யுமாறு கேட்கப்படும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்-களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேற்கண்டவாறு மோசடி செய்யும் நோக்கில் உங்களுக்கு ஏதேனும் மெசேஜ்கள் அல்லது இமெயில்கள் வந்தால், உடனடியாக report.phishing@sbi.co.in என்ற இ-மெயில் ஐடி-க்கு புகாரளிக்கவும் என்றும் குறிப்பிட்ட எச்சரிக்கை ட்விட்டில் PIB தெரிவித்து இருக்கிறது. மோசடி செய்பவர்கள் போலி பேங்க் மெசேஜ்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை தங்கள் தனிப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கவர்ந்து, ஏதேனும் தீங்கிழைக்கும் லிங்க்ஸ்களை கிளிக் செய்ய வைக்கிறார்கள் என்றும் PIB தெரிவித்து உள்ளது.

PIB ட்விட்டில் மோசடி செய்பவர்கள் அனுப்பி வரும் மெசேஜ் குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் ஷேர் செய்துள்ளது. அதில் “அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் SBI வங்கியின் ஆவணங்கள் காலாவதியாகி விட்டது. விரைவில் உங்கள் அக்கவுண்ட்பிளாக் செய்யப்படும். இப்போது http://sbikvs.II கிளிக் செய்து நெட் பேங்கிங் மூலம் உங்கள் ஆவணங்களை அப்டேட் செய்யவும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

உங்கள் தனிப்பட்ட அல்லது அக்கவுண்ட் விவரங்களை வங்கி ஒருபோதும் கால்ஸ் மற்றும் மெசேஜ்கள் மூலம் உங்களிடம் கேட்காது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற போலி மெசேஜ்களை முடிந்த வரை ஓபன் செய்யாமல் உடனடியாக டெலிட் செய்வது அல்லது மெசேஜை பார்த்து விட்டால் கூட டெலிட் செய்வது சிறந்த நடவடிக்கை என்றும் PIB குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: SBI, STATE BANK, State Bank of India