Home /News /business /

State bank: எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் தொடர நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

State bank: எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் தொடர நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

ஸ்டேட் பேங்க்

ஸ்டேட் பேங்க்

sbi : வங்கியைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்த வசதியும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் எஸ்பிஐ யோனோ செயலி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியாவில் அக்கவுண்ட் வைத்திருப்பவ்ர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மிகச்சிறந்த பொதுத்துறை வங்கியாக உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கும் வட்டி விகிதம் குறித்து தெரிந்து வைத்து கொள்வது நல்லது. சில சமயங்களில் வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால் பலரும் அதை கவனிக்க தவறிவிடுவார்கள். திடீரென்று வங்கிக்கு செல்லும் போது தான் பலருக்கும் இதுப்பற்றி தெரிய வரும். சில சமயங்களில் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும், ஃபோன் மூலமும் தெரியப்படுத்தப்படும். அதை கூட மிஸ் செய்யும் வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வங்கி வழங்கும் வட்டி பற்றி பார்ப்போம்.

    எஸ்பிஐ வங்கியில்  அடிப்படை வட்டி விகிதம் 0.10 சதவீதம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. . புதிய வட்டி மாற்றத்துக்குப் பிறகு வங்கியின் வட்டி விகிதம் 7.55 சதவீதமாக தற்போது உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்த வட்டி மாற்றம் அமலுக்கு வந்தது.

    இதையும் படிங்க.. ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் இந்த சேவையை தெரிந்து கொள்வது நல்லது!

    ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை பொறுத்த வரையில் ரூ.2 கோடிக்கு மேலான டெபாசிட்களுக்கு ஆரம்ப வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம்  3.10 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல, ரூ.2 கோடிக்குக் குறைவான டெபாசிட்களுக்கு ஆரம்ப வட்டி விகிதம் 2.90 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 5.40 சதவீதமாகவும் இருக்கிறது.

    இதையும் படிங்க.. ரீசார்ஜ் பேலன்ஸை தெரிந்து கொள்ள இத்தனை வழிகள் இருக்கு தெரியுமா?

    எஸ்பிஐ வங்கியைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்த வசதியும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் எஸ்பிஐ யோனோ செயலி.  ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் ஐபோன் போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ YONO மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து எளிமையாக எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Savings, SBI, State Bank of India

    அடுத்த செய்தி