Home /News /business /

அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனத்தில் இந்தியருக்கு சிஇஓ பதவி!

அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனத்தில் இந்தியருக்கு சிஇஓ பதவி!

லெட்சுமணன் நரசிம்மன்

லெட்சுமணன் நரசிம்மன்

Laxman Narasimhan | சர்வதேச அளவிலான நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் இந்தியர்களில் ஒருவராக உருவெடுக்க உள்ளார் லெட்சுமணன் நரசிம்மன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு முதன்மை செயல் அதிகாரியாக பதவி ஏற்பது அதிகரித்துள்ளது.  அந்த வகையில் பிரபல காஃபி விற்பனை நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக லெட்சுமணன் நரசிம்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாக இவர் ரெக்கிட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த ஹாவர்டு சுல்ஸ்-க்கு பதிலாக இவர் இப்போது நியமிக்கப்பட்டுளார். இந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி லெட்சுமணன் பொறுப்பேற்க உள்ளார்.

சர்வதேச அளவிலான நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் இந்தியர்களில் ஒருவராக உருவெடுக்க உள்ளார். முன்னதாக, லெட்சுமணனை தங்கள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கும் முடிவை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. ஸ்டார்பக்ஸ் நிறுவன இயக்குநர்கள் குழு உறுப்பினராகவும் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



 

புனேவைச் சேர்ந்த பொறியாளர்:

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் லெட்சுமணன் நரசிம்மன், மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் கடந்த 1967ஆம் ஆண்டு பிறந்தவர். அங்குள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, ஜெர்மனில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்ஏ மற்றும் பெனிஸ்லவானியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ ஆகிய படிப்புகளையும் முடித்தார்.

Also Read : இனி பயணிகளுக்கு டென்ஷன் இல்லை.. ஏர் இந்தியா அறிமுகப்படுத்தப்போகும் அசத்தல் சேவை! 

முதல் பணி:

இந்தியாவில் உள்ள எம்சிகின்சே என்ற நிறுவனத்தில் 2012ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் லெட்சுமணன் பணி செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் டெல்லி அலுவலக மேலாளர் மற்றும் இயக்குநர் போன்ற பதவி உயர்வுகளை பெற்றவர்.

2012ஆம் ஆண்டி பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்த இவர், அங்கு பல பொறுப்புகளை கடந்து வந்தார்.

குறிப்பாக, பெப்சிகோ நிறுவனத்தின் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பியா, சஹாரன் ஆஃப்ரிக்கா ஆகிய பிராந்தியங்களுக்கான முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.



 

பிரிட்டன் பிரதமரிடம் பணி:

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் செயல்படும் ஆலோசனைக் குழு ஒன்றின் உறுப்பினராகவும் லெட்சுமணன் செயல்பட்டுள்ளார். இறுதியாக, ரெக்கிட் நிறுவனத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார்.

Also Read : ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வரி..

கொரோனா காலத்திலும் இந்த நிறுவனத்தை திறம்பட வழிநடத்திச் சென்று பல வளர்ச்சி காண உதவியவர். குறிப்பாக இந்த நிறுவனத்தின் லைசால், டியூரெக்ஸ் காண்டம், குழந்தைகளுக்கான சுகாதார மற்றும் அழகு சாதன பொருட்கள் என பலவற்றை மிக அதிகமாக சந்தைப்படுத்தியதில் லெட்சுமணனுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ள அவரது 30 ஆண்டுகால அனுபவம் தங்கள் நிறுவனத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: America

அடுத்த செய்தி