முகப்பு /செய்தி /வணிகம் / 3 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இடம் உண்டா?

3 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இடம் உண்டா?

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா

பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) என்பது ஒரு பெண் குழந்தைக்கான சிறப்புத் திட்டமாகும், இது அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பிரிவு 80C வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் முக்கியத்துவம், இதில் எப்படி கணக்கை திறக்க வேண்டும், இதிலுள்ள பயன்கள் என்பன போன்ற பல தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

திட்டத்திற்கான கணக்கை எப்போது திறக்கலாம்?

சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான கணக்கைத் திறக்கும் போது, ​​பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும். இருப்பினும், கணக்கில் வைப்புத் தொகையாக ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை இருக்கலாம். கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது அந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து திருமணம் ஆகும் வரை செயலில் இருக்கும். பிறகு அவருக்கு 18 வயது அடைந்த -பிறகு, அவரது மேல் கல்விக்கான செலவிற்காக, மீதமுள்ள 50% தொகையை ஒரு பகுதியாக திரும்பப் பெறலாம்.

வேலையில் இருந்து ரிட்டயர்மென்ட் பெறுவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்திடுங்கள்!

முதிர்ச்சி காலத்திற்கு முன்பே மூட முடியுமா?

சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான கணக்கை ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் மூடலாம். குறிப்பாக கணக்கு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டாலோ, கணக்கு வைத்திருப்பவரின் உயிருக்கு ஆபத்தான நோய்களில் மருத்துவ உதவி அல்லது பாதுகாவலரின் இறப்பு போன்ற தீவிர காரணங்களின் போது, ​​கணக்கை இயக்குவது அல்லது தொடர்வது கணக்கு வைத்திருப்பவருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் போது கணக்கை ஒருவர் மூட செய்யலாம். இருப்பினும், உங்களின் கணக்கை முன்கூட்டியே மூடுவது என்பது கணக்கு துவங்கிய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் செய்யப்படக்கூடாது.

மேலும், கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தால், கணக்கு உடனடியாக மூடப்படும். கணக்கு வைத்திருப்பவரின் பாதுகாவலர் கணக்கில் மீதமுள்ள பணம் மற்றும் கணக்கு முன்கூட்டியே மூடப்படுவதற்கு முந்தைய மாதம் வரை அந்த அக்கவுண்டிற்கான வட்டியையும் பெறுவார்.

UIDAI : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

முதலீடு செய்வதற்கான தகுதி:

ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை பெண் குழந்தையின் பெயரில் அவரது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கைத் திறக்கலாம். மேலும், இந்த திட்டத்தின் விதிகளின்படி ஒரு டெபாசிட்தாரர் பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறந்து செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று, ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கைத் திறக்க அனுமதிக்க முடியும். இரட்டைப் பெண் குழந்தைகள் இரண்டாவது பிறப்பாகப் பிறந்தாலோ அல்லது முதல் பிரசவத்திலேயே மூன்று பெண் குழந்தைகளாகப் பிறந்தாலோ பெண் குழந்தையின் பெயரில் மூன்றாவது கணக்கைத் திறக்கலாம்.

மேற்சொன்ன விதிகளை நன்றாக படித்த பிறகு உங்கள் பெண் குழந்தைக்கான கணக்கை திறப்பது சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: India post, Post Office, Savings