ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பாலிசி பற்றி தெரியுமா? 

ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பாலிசி பற்றி தெரியுமா? 

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Shri Ram Life Insurance | இத்திட்டத்தில் வருமானம் மற்றும் செட்டில்மென்ட் பேஅவுட் என இரண்டு விதமான விருப்பங்களுடன் தனித்துவமான லைஃப் பிளஸ் கவரேஜும் வழங்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை முதல் 50 வயது வரையிலான முதியவர்கள் வரை அனைவரது நிதி தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ‘ஸ்ரீராம் லைஃப் பிரீமியர் அஷ்யூர்டு பெனிபிட்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஆயுள் காப்பீட்டுத் திட்டமான இது, உங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.

  இத்திட்டத்தில் வருமானம் மற்றும் செட்டில்மென்ட் பேஅவுட் என இரண்டு விதமான விருப்பங்களுடன் தனித்துவமான லைஃப் பிளஸ் கவரேஜும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆயுள் காப்பீட்டு எடுத்த நபரின் மரணத்திற்கு பிறகும் அவரது குடும்பத்தினர் பலன் பெறும் வகையிலான நன்மைகள் வழங்கப்படுகிறது. பிரீமியம் செலுத்தும் காலத்தின் போது ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினருக்கு பிரீமியம் செலுத்துவதில் எந்தச் சுமையும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பே அவுட் நன்மைகள் வழங்கப்படும். அதாவது காப்பீடு செய்த நபர் உயிரிழந்த பிறகும், அவர்களது குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

  இதற்காக பாலிசிதாரரின் குடும்பத்தினருக்கு 3 பேஅவுட் முறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வருமானம், மொத்த தொகை செட்டில்மென்ட், தவணை முறை செட்டில்மென்ட் ஆகிய 3 வகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். இதன் மூலம் பாலிசிதாரரின் குடும்பத்தினரின் பல்வேறு வகையான நிதித் தேவைகளை பூர்த்தி செய்வது, கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால இலக்குகளை அடைய உதவுவது, பாலிசிதாரர் இறந்த பிறகும் அவருடைய அன்புக்குரியவர்களின் லட்சியங்களை அடைய உறுதுணையாக இருப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

  Read More : பணம் இல்லாத சூழல்.. அதிகரிக்கும் மன அழுத்தம்.. நிதி பிரச்னையை சமாளிக்கும் டிப்ஸ் இதோ!

  ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸின் எம்டி மற்றும் சிஇஓ, காஸ்பரஸ் க்ரோம்ஹவுட் கூறுகையில், "புதிய திட்டமானது வரி விலக்கு பெற உதவுவதோடு, தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், வணிக நபர்கள் ஆகியோர் தங்களது கனவுகளை அடைவதற்கான உத்தரவாதம் மற்றும் கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்குகிறது. ஆயுள் காப்பீட்டின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில், இந்தத் திட்டம் பாலிசியின் முழு காலத்திற்கும் Life Plus கவரேஜை வழங்குகிறது மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்குப் பிறகும் காப்பீடு செய்யப்பட்ட குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது

  நிதித் தேவையைப் பொறுத்தவரை தேவையானது அவ்வப்போது மாறுபடும் என்பதால், பாலிசிதாரரின் குடும்பத்தினர் தங்களது தேவைக்கு ஏற்ப பேஅவுட் முறையை மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவது, பணத்தை சேமிப்பது, வீடு கட்டுதல் அல்லது வாங்குவது போன்ற வாடிக்கையாளர்களின் முக்கியமான நிதி தேவைகளை சமாளிக்க ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய திட்டம் உதவுகிறது.

  பிரீமியர் அஷ்யூர்டு பெனிபிட் திட்டத்தின் குறைந்தபட்ச பிரீமியமாக ரூ. 60,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பேமெண்ட் காலம் ஆறும் ஆண்டுகள் மற்றும் குறைந்தபட்ச பாலிசி காலம் 10 ஆண்டுகள் ஆகும். பாலிசிதாரர்கள், சரண்டர் மதிப்பில் அதிகபட்சமாக 80% வரையிலான கடனுக்கு ஆண்டுக்கு 9% வட்டியுடன் கடன் வசதியைப் பெறலாம். தற்போதுள்ள சட்டங்களின் கீழ் பொருந்தக்கூடிய வரிச் சலுகைகள் கிடைக்கும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Business, Savings