ஹோம் /நியூஸ் /வணிகம் /

அடுத்த வாரம் அலுவலகங்களை மூடும் ஸ்பாட்டிஃபை : காரணம் இது தான்!

அடுத்த வாரம் அலுவலகங்களை மூடும் ஸ்பாட்டிஃபை : காரணம் இது தான்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அலவலகம் வரசொல்லி பாடாய்ப்படுத்தும் நிறுவனங்களின் மத்தியில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் இந்த அணுகுமுறை பணியாலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அலவலகம் வரசொல்லி பாடாய்ப்படுத்தும் நிறுவனங்களின் மத்தியில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் இந்த அணுகுமுறை பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான ஸ்பாட்டிஃபை ஆப், அடுத்த வாரம் முழுவதும் தனது பணியாளர்கள் ரிலாக்ஸ் செய்வதற்காக ரீசார்ஜ் செய்வதற்காகவும் அலுவலகங்களை மூடி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி ஸ்பாட்டிஃபை-ன் ஹெச் ஆர் பிளாக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  ஸ்பாட்டிஃபை -ன் இந்த புதிய கலாச்சாரமானது கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு வெல்னஸ் வீக் (wellness week) என்ற பெயரில் தன்னுடைய பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இது போன்றதொரு நடவடிக்கையை மேற்கொண்டது. பணியாளர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையற்ற மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் இது உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது.

  “இந்த சம்பளத்துடன் கூடிய ஒரு வார விடுமுறையானது, உலகம் முழுவதும் உள்ள எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தில் ஒதுக்கி ரிலாக்ஸ் செய்வதற்கும், வேலைக்கு திரும்பும்போது புத்துணர்ச்சியோடும், புது சக்தியோடும் இருப்பதற்கும் உதவியாக இருக்கும்" என அந்த ப்ளாகில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்ற வருடம் இந்த வெல்னஸ் வாரத்துக்கான விடுமுறையின்போது, பல பணியாளர்கள் சுற்றுலா சென்றும், பலர் தங்கள் உறவினர்களோடும் சொந்த ஊர்களுக்கும் சென்று ஒரு வார விடுமுறையை அனுபவித்தனர். உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை மற்றும் பண வீக்கம் ஆகியவை ஏற்பட்டு, பணி செய்யும் இடத்தில் மனஅழுத்தம் வேலைபளுவும் அதிகரித்து வரும் இந்த நிலையில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்ற மேலும் ”இது போன்ற புதிய முயற்சிகளை எங்கள் பணியாளர்களின் நலன் கருதி மேற்கொள்வதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் தன்னுடைய பணியாளர்களுக்காக ஒரு வாரம் அலுவலகத்தை மூடியது கிடையாது. ஆனால் இது மிக அவசியமான ஒன்று. அனைத்து நிறுவனங்களும் மனித வளத்துறையும் தங்களுடைய பணியாளர்களின் ஆரோக்கியத்தின் அக்கறை காட்ட வேண்டும்” என்று அந்த ப்ளாகில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இது ஒருபுறம் இருக்க ஸ்பாட்டிஃபை, தனது சந்தா தொகையை உயர்த்தலாம் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மே மாதத்தில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் பங்கின் மதிப்பு 9.5% இறங்கியது. இதை பற்றி பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ டேனியல்இகே கூறுகையில் ”அமெரிக்காவில் மட்டும் ஸ்பாட்டிஃபை-ன் ஸ்ட்ரீமிங் கட்டணத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி இன்னும் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

  அடிச்சது பாரு ஜாக்பாட்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு லாட்டரியில் தலா ரூ.41 லட்சம் பரிசு!

   அதே சமயத்தில் ஸ்பாட்டிஃபை-ன் தொழில் முறை போட்டியாளரான ஆப்பில் நிறுவனம், தன்னுடைய மியூசிக் சப்ஸ்கிரிப்ஷனுக்கான சந்தாவை மாதத்திற்கு 1 டாலரில் இருந்து 10.99 டாலராக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  உண்மையில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் வளர்ச்சியானது இந்த ஆண்டின் மூன்றாவது கால் பகுதியில் மட்டும் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் அந்நிறுவனமோ வழக்கத்தை விட விளம்பரங்களின் மூலம் வரும் அவர்களது வியாபாரம் குறைந்துள்ளதாகவுமம், அதற்கு கடினமான இந்த மேக்ரோ சூழலே காரணம் என்றும் தெரிவித்துள்ள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Spotify