• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சென்னையிலிருந்து புதிதாக 6 வழித்தடங்களில் விமானச் சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி!

சென்னையிலிருந்து புதிதாக 6 வழித்தடங்களில் விமானச் சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி!

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

  • News18
  • Last Updated :
  • Share this:
பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் புதிதாக 6 வழித்தடங்களில் விமான சேவையை அறிவித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் சென்னையிலிருந்து வாரணாசி, ஷீரடி, போர்ட் பிளேர், பக்த்ரோக்ரா உட்பட 6 வழித்தடங்களில் புதிதாக விமானச் சேவை தொடங்க உள்ளது.

புதிய வழித்தடங்களில் 2019 ஜனவரி 10-ம் தேதி முதல் விமானச் சேவை அளிக்க உள்ள ஜெட் ஏர்வேஸ், சென்னை - பக்த்ரோக்ரா வழித்தடத்தில் மட்டும் 2019 பிப்ரவரி 11-ம் தேதி முதல் விமானச் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சென்னை - வாரணாசி, சென்னை - ஷீரடி, சென்னை - பக்த்ரோக்ரா வழித்தடங்களில் தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த வழித்தடங்களில் எல்லாம் ஜெட் ஏர்வேஸ் போயிங் 737-800 விமானங்களைப் பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: சென்னை ஐ.ஐ.டி கேண்டீனில் தீண்டாமை கடைபிடிப்பா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: