ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஜப்பானியப் பொருட்களைத் தவிர்க்கும் தென் கொரியர்கள்!

ஜப்பானியப் பொருட்களைத் தவிர்க்கும் தென் கொரியர்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அதற்கு தென்கொரியாவுக்குத் தக்க இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்று தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியா, சீனா இடையில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனே சீனா பொருட்களை இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது போல, தென் கொரியர்கள் ஜப்பான் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் தவிர்த்தும் வருகிறனர்.

  இரண்டாம் உலகப்போரின் போது தென் கொரியர்களை ஜப்பான் தொழிலாளர்களாகப் பயன்படுத்தியது. அதற்கு தென்கொரியாவுக்குத் தக்க இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்று தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அதனை அடுத்து இரண்டு நாட்டு மக்கள் இடையில் ஏற்பட்ட பதற்றத்தால், தென் கொரிய மக்கள் ஜப்பானிய தயாரிப்புகளான பேனா முதல் பீர் வரை அனைத்தையும் தென் கொரியர்கள் தவிர்த்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

  தென் கொரிய மக்களின் இந்த முடிவால் இரு நாடுகள் இடையிலும் ஏற்றுமதி, இறக்குமதி, சேவைகள், சுற்றுலா போன்ற சேவைகள் பெரும் அளவில் பாதிப்படைந்துள்ளது.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: North and south korea