முகப்பு /செய்தி /வணிகம் / விளம்பரத்துக்குச் செலவு செய்ததில் தென்இந்தியா டாப்!

விளம்பரத்துக்குச் செலவு செய்ததில் தென்இந்தியா டாப்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

2018-ம் ஆண்டுத் தேசிய அளவில் விளம்பரங்களுக்காகச் செலவு செய்வது 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

2018-ம் ஆண்டு விளம்பரத்துக்காகச் செலவு செயத்தில் தென் இந்தியா தான் முதல் இடம் என்று டிஏஎம் மீடியா ரிசர்ச் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற ஒரு அறிக்கையை டிஏஎம் மீடியா ரிசர்ச் நிறுவனம் சவுத்சைடு ஸ்டோரி 2019 என்ற தலைப்பில் தயாரித்துள்ளது.

அதில், இந்தியா முழுவதும் 2018-ம் ஆண்டு விளம்பரங்களுக்காக 65,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். அதிலும் 3-ல் ஒரு பங்கு  20,000 கோடி ரூபாய் தென் இந்திய விளம்பர செலவு என்று தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டுத் தேசிய அளவில் விளம்பரங்களுக்காகச் செலவு செய்வது 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தென் இந்தியாவில் 190 தொலைக்காட்சி சேனல்கள், 300 பத்திரிகைகள் மற்றும் 30 வானொலி நிலையங்கள் உள்ளன. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018-ம் ஆண்டுத் தென் இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

தென்இந்திய தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ போன்றவற்றில் 2018-ம் ஆண்டு 690 பிரிவுகளில் 66,000 விளம்பரதாரர்கள் 86,000 பிராண்டுகளின் விளம்பரங்களைச் செய்துள்ளனர்.

மேலும் 2018-ம் ஆண்டுத் தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ மூன்றும் 80 சதவீத விளம்பரங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

மேலும் பார்க்க: முதல் பயணத்திலே பழுதாகி நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

First published:

Tags: Advertisement