• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கேஸ் புக்கிற்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு: எல்பிஜி நிறுவனங்கள் தகவல்

கேஸ் புக்கிற்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு: எல்பிஜி நிறுவனங்கள் தகவல்

எல்பிஜி ஸ்மார்ட் கார்டு

எல்பிஜி ஸ்மார்ட் கார்டு

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக விநியோகித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கேஸ் புக், ரசீது மற்றும் பிற பேப்பர் பயன்பாடுகளைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக விநியோகித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேஸ் புக், ரசீது மற்றும் பிற பேப்பர் பயன்பாடுகளை குறைத்து ஏடிஎம் போன்ற ஸ்மார்கார்டை வழங்கலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    இந்த ஸ்மார்ட்கார்டில் எரிவாயு இணைப்பு எண், வாடிக்கையாளர்கள் விவரங்கள், சிலிண்டர் ரசீது குறித்த முழு விவரங்களும் பதிவேற்றப்படும் என்று கூறுகின்றனர்.

    வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்கார்டு அளிக்கும்பட்சத்தில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு ஸ்வைப்பிங் இயந்திரம் அளிக்கப்படும். பணம் பரிவர்த்தனை எப்போதும் போலவே இருக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது.

    எல்பிஜி சிலிண்டர்கள் சரியான நபருக்குத் தான் டெலிவரி செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல்களும் உறுதி செய்யப்படும் என்று இந்தத் திட்டம் குறித்து கூறப்படுகிறது. இது விரைவில் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: