டிஜிட்டலாக்கம்: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்?

QR குறியீடு

ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளவர்கள் இந்த QR குறியீடு சேவை மூலம் எளிதாக பணம் பரிவர்த்தனை செய்வார்கள்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கடைகளுக்கும் யூபிஐ பணம் பரிவர்த்தனை சேவையின் கீழ் வழங்கப்படும் QR குறியீட்டைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

  அண்மைக் காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது.

  அதை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அனைத்து கடைகளிலும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான வரவறிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் அதற்கான பணிகள் ஈடுபட்டு வருகிறது.

  QR குறியீடு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும். அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளவர்கள் இந்த QR குறியீடு சேவை மூலம் எளிதாக பணம் பரிவர்த்தனை செய்வார்கள். ஆனால் ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் எப்படி யூபிஐ சேவையை பயன்படுத்தி பணம் செலுத்துவார்கள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

  மொபைல் மூலமாக அதிகம் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடாக சீனா உள்ளது. சீனாவில் உள்ள பெரும்பான்மையானார்கள் Wechat மற்றும் Alipay மொபைல் பணம் பரிவர்த்தனை செய்து வருகிறனர். பிச்சைக்காரர்கள் கூட அங்கு மொபைல் பணம் பரிவர்த்தனை மூலம் பணம் பெறுகின்றனர்.

  சிங்கப்பூர், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் மொபைல் பணம் பரிவர்த்தனை சேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. QR குறியீடு சேவை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்ய பிஓஎஸ் இயந்திரங்கள் தேவையில்லை. எளிதாக ஒரு பேப்பரில் QR குறியீட்டை அச்சிட்டு கடையில் ஒட்டினால் போதும். பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து எளிதாகப் பணத்தைப் பெறலாம். சில்லறை தட்டுப்பாடும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

  மேலும் இந்த QR குறியீடு சேவை அனைத்து கடைகளிலும் கட்டாயமாக்கும் போது கூடுதல் சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குவது குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

  மார்ச் மாதம் மொபைல் வாலெட் மூலம் செய்யும் பரிவர்த்தனைகளின் அளவு 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: