விரைவில் ‘உதான்’ திட்டத்தில் வெளிநாட்டு விமானப் பயணமும் செய்யலாம்..!

இந்தச் சேவை அமலுக்கு வரும் போது உள்நாட்டு விமான பயணங்களினை போன்று வெளிநாட்டு விமானப் பயணங்களையும் குறைந்த விலையில் செய்யலாம்.

Web Desk | news18
Updated: December 4, 2018, 10:55 AM IST

மத்திய அரசின் உதான் திட்டத்தில் வெளிநாட்டு விமானப் பயணங்கள் சேவை விரைவில் வழங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டத்தினை உதான் என்ற பெயரில் வழங்கி வரும் நிலையில் அதில் விரைவில் வெளிநாட்டு விமானப் பயணச் சேவையும் வழங்கப்படும் என்று இது குறித்து தகவல் அறிந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவை அமலுக்கு வரும் போது உள்நாட்டு விமான பயணங்களினை போன்று வெளிநாட்டு விமானப் பயணங்களையும் குறைந்த விலையில் செய்யலாம்.

வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான உதான் டிக்கெட் கட்டணங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.

தற்போது உதான் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானச் சேவையில் 450 வழித்தடங்களில் அதிகபட்ச கட்டணமாக 2,500 ரூபாய்க்கு 1 மணி நேரம் அல்லது 500 கிலோ மீட்டர் வரையில் பயணம் செய்ய முடியும். மேலும் புதிய உள்நாட்டு விமான பயண வழித்தடங்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கி வரும் அதிரடி சலுகையினால் 24 சதவீதம் வரை விமானப் பயணிகள் அதிகரித்துள்ளனர் என்று விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Also See.. 
Loading...
First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்