நாடு முழுவதும் ஒரே வடிவில் வாகன ஓட்டுநர் உரிமம்... பழைய லைசன்சின் நிலை என்ன?

ஓட்டுநர் உரிமம்

ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் புதிய வடிவத்தில் அதை மாற்றிக்கொள்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மத்திய அரசு விரைவில் நாடு முழுவதும் ஒரே வடிவிலான ஒட்டுநர் உரிமத்தைக் கொண்டு வரும் திட்டத்தில் உள்ளதாக மனிகண்ட்ரோல் தளத்திற்கு அரசு தரப்பில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

  “வாகன ஓட்டுநர் உரிமத்தின் வடிவம் தற்போது மாநிலத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு வண்ணத்தில் உள்ளது. அதை மத்திய அரசு ஒரே வடிவமாக மாற்ற இருப்பதாகவும், இந்திய ஓட்டுநர் உரிமம் (தமிழ் நாடு) என்பதை மாற்றி ‘இந்திய யூனியன்’ என அச்சிட முடிவு செய்துள்ளது.

  ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் புதிய வடிவத்தில் அதை மாற்றிக்கொள்வது கட்டாயமாக்கப்பட உள்ளது” என்றும் இது குறித்த தகவல் அறிந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஓட்டுநர் வடிவம் குறித்து ஆக்டோபர் மாதம் ஒரு வரைவு அறிக்கையை உருவாக்கி நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அதிகாரிகளிடமும் கருத்துக்களைக் கேட்டுள்ளது.

  அதன் படி புதிய ஓட்டுநர் உரிமம் 2019 ஜூலை மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. மேலும் இந்தப் புதிய கார்டுகள் கண்டிப்பாக ஸ்மார்ட் கார்டுகளாகத் தான் இருக்கும், QR குறியீடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

  கோப்புப் படம்


  புதிய ஓட்டுநர் உரிமம் வடிவத்தில் ‘இந்திய யூனியன் ஓட்டுநர் உரிமம்’ என அச்சிடப்பட்டு மற்றும் உரிமையாளரின் பெயர், முகவரி, இரத்த வகை, உடல் உருப்புகள் தானம், வழங்கப்பட்ட தேதி, செல்லுபடியாகும் தேதி, வாகனத்தின் வகை மற்றும் பிற விவரங்களும் இருக்குமாறு உள்ளது.

  “போலி ஓட்டுநர் உரிமம் விற்பனையைத் தடுக்க மத்திய அரசு தரவுகளைத் திரட்டி வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருந்தால் அதை நீக்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன” என்றும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

  ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு பத்திரங்களின் அசல் நகலுக்கு பதிலாக மின்னணு முறையில் பயன்படுத்தவும் மத்திய அரசு நவம்பர் மாதம் முதல் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் பார்க்க: கஜா புயல் நிவாரண நிதி 2 வாரங்களுக்குள் வழங்கப்படும்: மத்திய அரசு
  Published by:Tamilarasu J
  First published: