ஊரடங்கு காலத்திலும் தீராத EMI விவகாரம்... தவிக்கும் வாடிக்கையாளர்கள்...!

சில நிதி நிறுவனங்கள் விதிகளை பின் தொடராமல், வாடிக்கையாளர்களை வாட்டி வதைப்பது முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
ஊரடங்கு அறிவிப்பால், கடன் வாங்கியவர்கள் 3 மாதங்களுக்கு EMI செலுத்தாமல் இருக்க அனுமதி வழங்கலாம் என வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அறிவுறுத்தியது. ஆனால், சிலர் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறிவருகின்றனர்.

கேஷ்பீன், கிஷ்காட், கிரிடிட்பீ, பிளாஷ்கேஷ், கேஷ் பஸ், லோன்பிரண்ட்.. இவை அனைத்தும் செயலி மற்றும் இணையம் மூலமும் செயல்பட்டு வரும் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள். இணையத்தில், கிளிக் செய்தால் போதும் பணம் குறித்த ஆசை விளம்பரங்களால் கவர்ந்திழுத்து பலரை வாடிக்கையாளராக மாற்றிவிடுகின்றன

இந்த நிறுவனங்களில் குறுகிய கால கடன் பெற்றவர்களில் பலர், ஊரடங்கு நெருக்கடியில், தங்களது கடனுக்காக EMI-ஐ செலுத்த வேண்டிய இன்னோர் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி ஒருவர்தான், கோவையைச் சேர்ந்த இந்த பெண்மணி. 3 மாதங்களுக்கு EMI கட்டவேண்டியதில்லை என்ற அறிவிப்பால் தங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்கிறார் இவர்.


தன்னைப்போல், தனது நட்பு வட்டாரங்களிலும் பலர் இதுபோன்ற செயலிகளிருந்து கடன் வங்கிவிட்டு சிரமத்திற்கு ஆளாகிவருவதாக கூறுகிறார் இந்த பெண்மணி.

கொரோனா நெருக்கடியில் யாரேனும், EMI கட்டத்தவறினால், சிபில் ஸ்கோரில் பதிவு செய்ய கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தாலும், சில நிதி நிறுவனங்கள் EMI-ஐ செலுத்தவில்லை என்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதைத்தாண்டி, ஒரு சில நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்களின் அலுவகத்திலிருந்து, சம்பளம் போடவில்லையா? முழு சம்பளமும் கொடுக்கவில்லையா? அல்லது பாதி சம்பளம் கொடுக்கப்பட்டதா? என்பதை கடிதமாக பெற்று சமர்ப்பித்தாலொழிய, EMI-ஐ கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அறிவித்துள்ளன.நெருக்கடியான காலங்களில் சாமானிய மக்களின் நிலையை உணர்ந்து நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதற்காகவே, ரிசர்வ் வங்கி இது போன்ற தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், சில நிதி நிறுவனங்கள் விதிகளை பின் தொடராமல், வாடிக்கையாளர்களை வாட்டி வதைப்பது முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also see...

 
First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading